Breaking News :

Wednesday, December 04
.

நட்பால் உயர்ந்தவர் கமல்


நோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யாவை யாருமே சென்று பார்க்க அனுமதி இல்லை.. ஆனால் ஸ்ரீவித்யா கடைசி நாட்களில் பார்க்க விரும்பியது தனது நண்பர் கமலஹாசனைதான்!!

இவர்கள் இருவரை பற்றியும் எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் திரையுலக காலில் சக்கரம் கட்டி பறந்தன. ஆனால் அதையும் தாண்டி, புரிதல் என்ற நட்பு பாதையில் பயணித்த ஸ்ரீவித்யாவை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார் கமல்.

பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் இருவரும். ஸ்ரீவித்யாவின் தோற்றத்தை கண்டு கண்கலங்கி நின்றார் கமல். ஸ்ரீவித்யாவும்தான்!!

அவரை சந்தித்துவிட்டு மருத்துவமனை விட்டு வெளியே கமலிடம், புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கமல், "உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் நிலை குறித்து வெளியே சொல்வது அநாகரீகம்" என்று சொன்னார்.

பிறகு விரைவிலேயே ஸ்ரீவித்யா மரணத்தை பற்றி சொன்ன கமல், " அவள் இறந்தாலும் இறவா நட்பு" என்றார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் என்றென்றும் இருக்க முடியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.