Breaking News :

Wednesday, December 04
.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்தனர் - சோகத்தில் ரஜினி குடும்பம்!


நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஐஸ்வர்யாவும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

நடிகர் தனுஷ். இவர் தமிழ் தவிர பிறமொழி மற்றும் ஹாலிவுட் படத்து வருகிறார். தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்துள்ள இளம் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு மற்றும் பல நடிகர்களை அறிமுகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமான ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு திடீர் என சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு தனுஷ் திடீர் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறி உள்ளார். இதேபோன்ற அறிக்கையை ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் வெளியிட்டுள்ளார்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.