Breaking News :

Friday, October 11
.

நடிகர் பரத் நடித்த “நடுவன்” தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவவிற்கு தேர்வு


நடிகர் பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவவிற்கு  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

இயக்குநர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர்  பரத் நடித்த “நடுவன்” திரைப்படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் ஷரன் குமார் கூறுகையில்.. ,
12வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022 க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் குழு  மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் எந்த  வடிவத்தில் கிடைத்தாலும் அது  எப்போதும் வரவேற்க தகுந்ததே. எங்கள் திரைப்படம் வெளியான போதிலிருந்தே  நேர்மறையான வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வருகிறது.   உலக திரைப்பட திருவிழாவான சிங்கப்பூர், இந்தோ மலேசியா சர்வதேச திரைப்பட விழா, மொக்கோ சர்வதேச திரைப்பட விழா புதுச்சேரி போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில்  உலகெங்கிலும்  எங்கள் படம் விருதுகளை வென்றுள்ளது. செப்டம்பர் 2021 இல் ஓடிடி பிளாட்ஃபார்மில் (SonyLIV) வெளியான பிறகும், இந்த விழாக்களில் எங்கள் திரைப்படம் அங்கீகாரம் பெறுவது எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு சிறந்த உந்துதலாக உள்ளது. எனது தயாரிப்பாளர் லக்கி சாஜர்,  நடிகர் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆகியோருடன், நான் நினைத்தது போலவே படத்தை வடிவமைக்க, தூணாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மரியாதைகள், நல்ல உள்ளடக்கம் சார்ந்த கதைகளை இயக்கவும், சிறந்த படங்களை தொடர்ந்து  வழங்கவும் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.


செப்டம்பர் 21, 2021 முதல் SonyLIV இல் ‘நடுவன்’  திரைப்படம் நேரடி ஓடிடி பிரீமியராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் திரைப்படம் அழுத்தமிகு கதை மற்றும் அதிரடி திருப்பங்கள் மற்றும் திரில் கூடிய திரைக்கதையுடன் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் இருத்தி வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. நட்சத்திர நடிகர்கள் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜப்பே, சார்லி மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தரண் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், சன்னி சவுரவ் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஷரன் குமார் எழுதி இயக்கியுள்ள “நடுவன்” படத்தை Cue Entertainment சார்பில் லக்கி சாஜர் தயாரித்துள்ளார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.