Breaking News :

Friday, October 11
.

அருண் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் இணைந்து ரத்ததானம் செய்தார்


தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அன்று தனது பிறந்தநாளை உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் கொண்டாடினார். அவரும் ரசிகர்களுடன் இணைந்து ரத்ததானம் செய்தார்.

நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.

அதன்பிறகு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரசிகர்கள் நற்பணி மன்றம் நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் பங்கேற்றார். அவரும் ரசிகர்களுடன் இணைந்து ரத்ததானம் செய்தார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.