Breaking News :

Monday, June 24
.

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்


நடிகர் அர்ஜுன். பிரபல கன்னட நடிகர் ஷக்தி பிரசாத்தின் மகனான இவர், தமிழில் நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு தமிழ்த்திரைப்படங்கள் வெற்றிபெற்றன. நடிகராக இருந்த இவர் படங்களை தயாரித்து இயக்கவும் செய்தார்.

இவர், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அர்ஜுன் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். சமீபத்தில் சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் தொகுப்பாளராகவும் மாறினார். 

இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் தாயார் லக்‌ஷ்மி தேவம்மா இன்று உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த 85 வயதாகும் லக்‌ஷ்மி தேவம்மா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு திரையுலகினர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.