Breaking News :

Saturday, December 14
.

அதிர்ச்சி: நடிகர் விஜயகாந்த் காலமானார்


நடிகர் விஜயகாந்த் உடல்நலம் குறைவால் மரணமடைந்த செய்தி சினிமா துறையினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

 'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.

 

வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர், நாயகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.

 

தமிழ் சினிமாவில் 'புரட்சி கலைஞர்' என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் 'கேப்டன்' என்றே அழைக்கின்றனர்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.