விஜய் சேதுபதி மகன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

vijay-sethupathi-son-suriya-new-movie-pooja


தமிழ்த் திரையுலகில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நீண்ட நாட்கள் போராடி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் நடிகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. 

தற்போது, இவரின் மகன் சூர்யா ஒரு புதிய படத்தில் கதாநாயக ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளார். அந்தப் படத்தின் படபூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவர் ஏற்கனவே, ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ போன்ற படங்களில் சூர்யா தனது தந்தையுடன் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்

இதற்போது, சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளா ‘ஃபீனிக்ஸ் வீழான்’. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினை மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.