Breaking News :

Saturday, July 13
.

Kalki 2898 AD movie review


நல்ல பட்ஜெட்டும் போதுமான கால அவகாசமும் இருந்தால் இந்திய சினிமாக்களால் எத்தகைய கற்பனையையும் அப்படியே திரையில் கொண்டு வந்துவிட முடியும் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறது Kalki 2898 AD.

தூணிலிருந்து துரும்பு வரை அத்தனையும் நம் உலகத்தில் பார்க்க முடியாத கற்பனைகள் தான்.

ஆனால் எந்தவொரு ஃப்ரேமிலும் பிசிறு தட்டாமல், எந்த சந்தேகமும் இன்றி மூன்று மணி நேரம் சஞ்சரிக்க ஒரு புது உலகத்தை படைத்திருக்கிறது படக்குழு. நான்கு வருடங்களாக கொட்டப்பட்ட அத்தனை உழைப்பும் விஸ்வரூபமெடுத்து தெரிகிறது.

சி.ஜி, ப்ரொடக்ஷன் டிசைன் என தொழில்நுட்ப ரீதியில் இந்த படம் இந்திய சினிமாவிற்கு ஒரு பெஞ்ச்மார்க். இதை விஞ்சும் அளவிற்கான கிராஃபிக்ஸும் உருவாக்கமும் தான் அடுத்த சில வருடங்களுக்கு பல படைப்பாளிகளின் இலக்காக இருக்கப் போகிறது. இதில் இடம்பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் நான் பார்த்த ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

I only wish the writing had been at least half as good as the CG. அசுர உழைப்பு & அசர வைக்கும் தொழில்நுட்பம் மூலம் ஒரு புதிய பிரபஞ்சத்தையே கண்முன் நிறுத்தினாலும், அந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது, அது எத்தனை சுவாரசியமாக, உணர்வுப்பூர்வமாக நடக்கிறது என்பது தானே சினிமா? கல்கி‘யின் திரையெழுத்து சிறப்பாகவோ இல்லை சுமாராகவோ இருந்திருந்தால் கூட, எல்லா வகையிலும் இந்த வகையறா உலக சினிமாக்களோடு போட்டி போடும் படமாக உயர்ந்திருக்கும். அல்லது இந்த முழுப் படமும் முதல் பாதியாக இருந்திருந்தால்?!

(சலார் திரைப்படத்திலும் இதே பிரச்சினை இருந்தது).
 
நாம் ஆங்கிலப் படங்களில் பார்த்து வியந்த சின்ன சின்ன விஷயங்கள் முதற்கொண்டு அத்தனையும் இதில் இருக்கிறது. அதே தரத்தில். ஆனாலும்  க்ளைமேக்ஸில் வரும் ஒரு சிறிய மொமன்ட்டை தவிர்த்து திரையரங்கில் கைத்தட்டல்களோ கூச்சல்களோ எழவில்லை. காரணம், எழுத்துதான்.

இப்படத்தின் கட்டமைப்பு, கதாப்பாத்திர வடிவமைப்பு, கதைப் பயணம், சம்பவங்களின் elevation, நாயகனின் குறிக்கோள், தடைகள், மனமாற்றம் போன்றவற்றை முன்வைத்து திரைக்கதை குறித்த ஒரு ஆரோக்கியமான விவாதமே செய்யலாம். அத்தனை Hit & Misses இருக்கின்றன படத்தில்.

இருப்பினும், முதலில் சொன்னதுபோல், இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்லை நட்டு வைத்துள்ளது. தலைசிறந்த கிராஃபிக்ஸ் மற்றும் உருவாக்கத்தினால், திரையரங்கில் மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரையனுபவத்தை பரிசளிக்கிறது.

அதற்காகவே நிச்சயம் திரையரங்கில் சென்று காணவேண்டிய படமாகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.