Breaking News :

Saturday, October 01
.

துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித்

நடிகர் அஜித் அணி மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. 

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் பதக்கங்களை வென்றார். இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
  
துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித்: பதக்க விவரம் இதோ
திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். திருச்சியில் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர் கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை நிறைவடைகிறது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் கடந்த 27-ந் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட அஜித்குமார் அன்று இரவே திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.