Breaking News :

Thursday, April 25
.

நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இடுவது ஏன்?


அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது...

அது போல் ஒருபோதும் நிலவாசல் படியில் அமரக்கூடாது. ஒரு சிலர் பொழுது போகாமல் வீட்டின் தலைவாசல் பகுதியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். 
இவை மிகவும் மோசமான பிரச்சனைகளை உங்களுக்கு தரும்...

படியிலிருந்து இறங்கி தான் நீங்கள் அமர்ந்து கதை பேச வேண்டும். அது போல் வாசல்படியில் தலை வைத்து படுக்க கூடாது என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். 
அதுவும் இதற்காகத் தான்...

வீட்டின் தலை வாசலில் மகாலட்சுமிகளும், கதவில் குலதெய்வமும் வாசம் செய்வதால் அந்த இடத்தில் தலை வைத்து படுக்கக்கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். 

அது போல் தலைவாசலில் கால் வைத்து நிற்கக் கூடாது. அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றை செய்தால் வீட்டில் தரித்திரம் தான் உண்டாகும்...

இது போன்ற சில தவறுகளை வீட்டில் செய்தால் பணவரவு கட்டாயம் தடைபடும்... 
வீட்டின் உள்ளவர்களுக்கு மன நிம்மதி கெடும்.

கெட்ட சக்திகளும் உள்ளே நுழைவதற்கு வசதியாக அமைந்து விடும்...

இவ்வாறு தலைவாசலில் நாம் செய்வதால் வீட்டை பாதுகாக்கும் தெய்வங்கள் செயல்பட முடியாமல் போய்விடும்...

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நம்முடைய குலதெய்வம் தான்...

அதனால் தான் எப்போதும் நம் வீட்டின் கதவுகளில் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன... 

சில சமயங்களில் நமக்கு தெரியாமல் நாம் சில நேரங்களில் நமக்கு வரும் ஆபத்துக்கள் விலகியதை அடுத்து தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விட்டது என்று கூறுவோம்...

நம்முடைய பல கஷ்டங்களில் இருந்து குலதெய்வம் நம் துணையாக இருந்து பாதுகாப்பதாக ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன...

எனவே இதுவரை தெரியாமல் செய்திருந்தாலும், இனியும் தலைவாசலில் இந்த தவறுகளை நாம் செய்யாமல் இருப்பது தான் மிகவும் நல்லது...

நமது வீட்டின் தலைவாசல்... என்ற
நிலைவாசல் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு மாலை நேரங்களில் விளக்கு வைத்து வழி படுவோம்...!!!

நம் சாஸ்திர முறைகளே பின்பற்றுவோம்.!  அதன்வழி பாதையிலே நடப்போம். வருகின்ற இளைய தலைமுறைக்கு எடுத்து வைப்போம்..


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.