Breaking News :

Sunday, September 08
.

அமைதிதான் பல நேரங்களின் நல்லது எப்படி? ஏன்?


குழப்பமான நேரத்தில் அமைதியாக இரு 
நமக்கு எப்போதெல்லாம் குழப்பம், பயம், பதற்றம்,  கடனை நினைத்து  கஷ்டம் இப்படி எது வந்தாலும் அப்போ நீங்கள்  பண்ணவேண்டியது ஒண்ணே ஒண்ணுதான் அது அமைதியா இருப்பது தான் அந்த மாதுரி கஷ்டமான நேரத்தில்  நீங்கள்  அதையே யோசிக்கும்போது இன்னும் உங்களுக்கு குழப்ப நிலைதான் வரும் 

 
என்ன கஷ்டம் வந்தாலும் அதை விட்டு கொஞ்சம் தள்ளி போங்க , இல்ல முடியலைன்னா ஒரு நாள் 2 நாள் லீவு போட்டு எங்கேயாவது தனியா போய்ட்டு வாங்க 

வீட்ல கணவன் மனைவி சண்டை வேற எந்த பிரச்சனையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் அமைதியா மட்டும் இருங்க , எதை பற்றியும்  ஆழ்ந்து யோசிக்கலாம் வேண்டாம் 

நிச்சயம் அந்த அமைதிக்கு பிறகு ஒரு நல்ல முடிவு நீங்க எடுப்பிங்க 
 
அந்த அவசரமான நேரத்தில்  மட்டும் நம்ம தெளிவாக இருந்துட்டா போதும் அதன்பின்  நம்ம சரியாக தான் இருப்போம் 

இறைவன்மேல நம்பிக்கை உள்ளவங்க இறைவா என்னால முடியல இருந்தாலும் நான் உங்களைத்தான் நம்புறேன் என்று சொல்லி 

மனதார இறைவன்மேல் நம்பிக்கை வைத்து ” ஓம் நமசிவாய ” சொல்லுங்கள்  

உங்க மனதிற்கு  நிச்சயம் ஒரு ஆறுதலும் தைரியமும் கிடைக்கும் 

நிறைய நேரத்தில்  நாம்  பல சிக்கலில் மாட்டிக்கொள்வோம்  என்னடா பண்ணுறது தெரியாம இருப்போம் எங்க போறது ஒன்னும் புரியாம  இருக்கும்

அப்போதெல்லாம் நமக்கு ஒரே ஆறுதல் இறைவன் மட்டும் தான்  , அதனால் அதை  இறைவன்கிட்ட விட்டுருங்க 

அந்த கஸ்டமான நேரத்தை மட்டும் நம்ம கடக்க பழகணும் அடுத்தநாளே கூட நாம எதிர் பார்க்காத விசயங்கள் நடக்கும் அதுனால தான் சொல்லுறேன்.

எந்த துன்பமான நிலை வந்தாலும் எல்லாத்தையும் விட்டு கொஞ்சம் அமைதியாக இருங்க , செல்போன் , வேலை , நண்பர்கள் இதெல்லாம் தள்ளி வச்சிட்டு கொஞ்சம் தூரம் நடந்துட்டு மனதை  அமைதி படுத்திட்டு வாங்க 
 
அப்பறம் எல்லாமே நல்ல படி நடக்கும் இதை செய்து பாருங்க 

அமைதி தான் பல நேரத்தில் நமக்கு நல்ல முடிவுகளை எடுக்க வைக்கும்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.