Breaking News :

Friday, June 09

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?

*  காலையில் எழுந்ததும் சூரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சூரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சூரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சூரியன்.

* இன்னும் பலவிதமாக சூரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?

*  மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

* சூரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை பூமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சூரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.

* சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.

* கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சூரியனை வழிபடுகின்றனர்.

* சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்.

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.