Breaking News :

Wednesday, June 19
.

ஸ்ரீ கால பைரவர் யாருடைய அம்சம்?


செவ்வாய்க்கிழமை விரதம்:   செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 முறை மந்திரம் கூறி பூஜிக்க ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும்.

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்  

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில்
(கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார்.

 பைரவர் யாருடைய அம்சம்?

பைரவர், வீரபத்திரர், க்ஷேத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் ÷க்ஷத்ர பாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

 இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம் :

இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. மாலையில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி இல்லாதவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்த கெடுதலும் வராது என உறுதிமொழி எடுத்து பின்னர் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால் இழந்த பொருளை மீட்டுக் கொடுப்பார் பைரவர்.

 துன்பங்களில் இருந்து விடுபட உதவும் பைரவர் பரிகாரம் :

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். 

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிகிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.
கோவில் நடை திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது. இதை செய்ய முடியாதவர்கள் தினமும் விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். 

அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம். பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி, அணைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர், மேலும் சனி பகவானுடைய குரு.

 ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் :

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். 

துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம். 
சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர் 
வைகாசி தாதா - ருரு பைரவர் 
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர் 
ஆடி அரியமான் -கபால பைரவர் 
ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர் 
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர் 
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர் 
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர் 
தை விஷ்ணு - குரோதன பைரவர் 
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர் 
பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.
 வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் :
வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:-

1. செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.
2. சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
3. ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.