Breaking News :

Monday, March 20

கிருஷ்ண பகவானின் அருள் வாக்குகள்!

நீ பிச்சை எடுத்து வாழ்கின்றாயா ? 
பந்து மஹாந்தியைப் போல் பக்தி செய் !
உலகிற்கு நல்லது செய்தும் அவமரியாதையா ? 
பத்ராசல ராமதாசரைப் போல் பக்தி செய் !
வாழ்க்கையே பிரச்சனையா ? 
மஹாராஜா ஸ்வாதித்திருநாளைப் போல் பக்தி செய் !

காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!
நீ சொல்கின்ற காரணங்களில் பல
பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி
செய்தார்கள்!

நீயும் அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !
தகப்பன் கொடுமைக்காரனா ? ப்ரஹ்லாதனைப் போல் பக்தி செய் !
தாயால் கெட்ட பெயரா ? பரதனைப் போல் பக்தி செய் !
அண்ணனே உன்னை அவமதிக்கிறானா ? தியாகராஜரைப் போல் பக்தி செய் !
குடும்பத்தில் தரித்ரம் தலைவிரித்தாடுகிறதா?
குசேலரைப் போல் பக்தி செய் !
மனைவி அடங்காப் பிடாரியா ? 
சந்த் துகாராமைப் போல் பக்தி செய் !

கணவன் கொலைகாரப் பாவியா ? மீராவைப் போல் பக்தி செய் !
புகுந்த வீட்டில் கொடுமையா ? சக்குபாயைப் போல் பக்தி செய் !
பெற்ற பிள்ளையை இழந்துவிட்டாயா ? பூந்தானத்தைப் போல் பக்தி செய் !
பெற்ற தாயை சிறுவயதில் இழந்துவிட்டாயா? 
நாரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலைக்காரி பெற்ற பிள்ளையா ? விதுரரைப் போல் பக்தி செய் !
நீ தப்பான குடும்பத்தில் பிறந்தவளா ? கானோ பாத்ராவைப் போல் பக்தி செய் !
உடலில் வியாதியால் வேதனையா ? நாராயண பட்டத்ரியைப் போல் பக்திசெய்!
யாராவது கை கால்களை வெட்டிவிட்டார்களா ?
ஜயதேவரைப் போல் பக்தி செய் !

இளம் விதவையாய் குழந்தைகளுக்காக வாழ்கிறாயா ? 
குந்திதேவியைப் போல் பக்தி செய் !
மனைவியை இழந்து குழந்தைகளோடு வாழ்கிறாயா ? 
மாதவேந்திரபுரியைப் போல் பக்தி செய் !
சொந்தக்காரர்களே உன் குடும்பத்தை ஏமாற்றிவிட்டார்களா ? 
பாண்டவர்களைப் போல் பக்தி செய் !
உடன் பிறந்த தம்பியே உனக்கு விரோதியா ?
ஜயமல்லரைப் போல் பக்தி செய் !

பெற்ற குழந்தையே உன்னை கேவலமாக நடத்துகிறதா ? 
கைகேயியைப் போல் பக்தி செய் !
உன் குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லையா ? 
நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் யாரும் ஆதரிக்கவில்லையா ? 
வால்மீகியைப் போல் பக்தி செய் !
கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றாயா ? 
பீஷ்மரைப் போல் பக்தி செய் !

உன் கணவன் கஞ்சனா ? 
புரந்தரரின் மனைவி லக்ஷ்மியைப் போல் பக்தி செய் !
வியாபாரத்தில் நஷ்டமா ? சாருகாதாஸரைப் போல் பக்தி செய் !
உன் கணவன் நாஸ்திகனா ? மண்டோதரியைப் போல் பக்தி செய் !
உன் கணவன் சன்னியாசியாகிவிட்டாரா ? விஷ்ணுப்ரியாதேவியைப் போல் பக்தி செய் !
கணவன் உன்னை கண்டு கொள்வதில்லையா ? 
சுநீதியைப் போல் பக்தி செய் !
குடும்பத்தினர் உன்னை ஒதுக்கிவிட்டார்களா ? 
ஜடபரதரைப் போல் பக்தி செய் !

நீ வேலை பார்க்கும் இடத்தில் தொந்தரவா ? 
அக்ரூரரைப் போல் பக்தி செய் !
ஊரே உன்னை ஒதுக்கிவிட்டதா ? சோகாமேளரைப் போல் பக்தி செய் !
சுகமாக வாழ்ந்து இப்பொழுது கஷ்டமா ? ரந்திதேவரைப் போல் பக்தி செய் !
உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையா ? யசோதையைப் போல் பக்தி செய் !
பிறந்த குழந்தைகள் எதுவும் தங்கவில்லையா ? 
தேவகியைப் போல் பக்தி செய் !

அறிவு ஒன்றும் இல்லாத முட்டாளா ? கோபர்கள், கோபிகைகள் போல் பக்தி செய் !
பிறவிக் குருடனா ? 
சூர்தாஸரைப் போல் பக்தி செய் !
உடல் ஊனமுற்றவரா ? 
கூர்மதாஸரைப் போல் பக்தி செய் !
நீ ப்ருஹந்நிலை போல் அரவாணியா ? சுஹக்ஷாவைப் போல் பக்தி செய் !

இன்னும் பலகோடி பக்தர்கள் உண்டு !
பக்தி ஒன்று தான் உன் வாழ்க்கைக்கு என்றும் ஒரே ஆதாரம் ! 
அதை செய்யாமல் நீ எதைச் செய்தாலும் உனக்கு சமாதானம் இல்லை ! 
இதுவரை காரணம் சொல்லி உன் ஆனந்தத்தை நீ தொலைத்தது போதாதோ ? 
இனிமேல் காரணம் சொல்லாதே !
கிருஷ்ணனிடம் பக்தி செய்ய தொடங்கிவிடு !!

ஹரே ராமா !! ஹரே கிருஷ்ணா !!...

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.