Breaking News :

Thursday, April 25
.

ராசிகளுக்கான கணபதி மந்திரம்


பன்னிரண்டு ராசியினர் வழிபட வேண்டிய விநாயகர் மற்றும் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்

ஒவ்வொரு ராசியினர் வணங்க வேண்டிய முதல் கடவுளான விநாயகர் ரூபங்கள் மற்றும் அவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம் என்ன என்பதை பார்போம்...

#மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட வீரமிக்கவரான மேஷ ராசியினர் வீர கணபதியை வழிபட வேண்டும்.

மேஷம் ராசிக்கான கணபதி மந்திரம்:
கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்.

#ரிஷபம்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர்கள். இவர்கள் வித்ய கணபதியை வழிபடுவது நல்லது.

ரிஷபம் ராசிக்கான கணபதி மந்திரம்:
நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்

#மிதுனம்

புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் அருள் பெற லட்சுமி கணபதியை வழிபடுவது சிறப்பானதாகும்.

மிதுனம் ராசிக்கான கணபதி மந்திரம்:
ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே

#கடகம்

சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் ரோம்ப கணபதி உருவத்தை வழிபட நல்லருள் கிடைக்கும்.

கடகம் ராசிக்கான கணபதி மந்திரம்:
பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல

#சிம்மம்

சூரிய பகவானை அதிபதியாக கொண்ட தைரியமிக்க, ஆளுமை கொண்ட சிம்ம ராசியினர், மேலும் வெற்றிகளை குவிக்க விஜய கணபதியை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசிக்கான கணபதி மந்திரம்:
நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

#கன்னி

புதன் பகவானை அதிபதியாக கொண்ட மென்மையானவர்களான மிதுன ராசியினர் மோகன கணபதியை வழிபட்டு வர எல்லா நன்மைகளூம் உண்டாகும்.

கன்னி ராசிக்கான கணபதி மந்திரம்:
தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்

#துலாம்

சுக்கிரனை பகவானை அதிபதியாக கொண்ட வெற்றியை ருசிக்கக் கூடிய துலாம் ராசியினர் வெற்றி கணபதியை வணங்கி வருவது நல்லது.

துலா ராசிக்கான கணபதி மந்திரம்:
பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

#விருச்சிகம்

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர், சக்தி கணபதியை வணங்கி வர எல்லாம் நன்மையாக மாறும்.

விருச்சிக ராசிக்கான கணபதி மந்திரம்:
சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

#தனுசு

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் சங்கடஹர கணபதியை வணங்கி வருவது நல்லது.

தனுசு ராசிக்கான கணபதி மந்திரம்:
சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்

#மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினர் யோக கணபதியை வழிபட்டு வர அனைத்து துன்பங்களும் நீங்கி யோகங்கள் உண்டாகும்.

மகர ராசிக்கான கணபதி மந்திரம்:
ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்

#கும்பம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியினர் சித்தி விநாயகரை வணங்கி வர அனைத்து நன்மையில் முடியும்.

கும்பம் ராசிக்கான கணபதி மந்திரம்:
லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே

#மீனம்

குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் பால கணபதியை வணங்கி வர காரியசித்தி அடையும்.

மீனம் ராசிக்கான கணபதி மந்திரம்:
பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக..!

 கு பண்பரசு


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.