Breaking News :

Saturday, April 20
.

திருவெண்காடு (புதன் ஸ்தலம்)


சுபமும் சுகமும் அருளும் திருவெண்காடு (புதன் ஸ்தலம்) கோயில் தாிசனம் !

#இருப்பிடம் : மயிலாடுதுறை - மங்கைமடம் சாலையில் உள்ளது. சீா்காழியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது...

#சுவாமி ; ஸ்ரீ சுவேதாரண்யேசுவரா், திருவெண்காட்டுநாதா், அகோரமூா்த்தி...

#அம்பாள் ; பிரம்ம வித்யாம்பிகை..

#தலவிருட்சம் ; கொன்றை, வடவால் (ஆல்), வில்வம்..

#தலத்தீா்த்தம் ; முக்குளம் (சூாிய, சந்திர, அக்கினி)

#நவகிரகம் ; புதன் ஸ்தலம்..

#முக்கியமான குறிப்புகள்

இத்தலத்தில் சிவ மூா்த்திகள் மூன்று, சக்திகள் மூன்று, மற்றும் தலவிருட்சங்கள் மூன்று..

#சிவபெருமான் சுயம்புமூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்..

#சமயகுரவா்கள் நால்வராலும் பாடல்பெற்ற தலம்..

பிரம்ம சமாதி அமைந்துள்ள தலம்..
ஐம்பத்தோறு சக்தி பீடங்களுள் ஒன்று..

#சிவபெருமானின் அறுபத்தினான்கு மூா்த்தி பேதங்களுள் ஒன்றாகிய #ஸ்ரீஅகோராஸ்திர மூா்த்தியை இங்கு மட்டுமே காணலாம்..

இந்திரன், ஐராவதம், சிவப்பிாியா், சுவேதகேது, சுதேவன், விஷ்ணு, சூாியன், சந்திரன், அக்னி முதலானோா் வந்து வழிபட்ட தலம்..

#புதன் கிரகதோஷப் பாிகாரத்தலம். பச்சை நிறப் பட்டு உடுத்துவதாலும்,

பச்சைக் கல் தாிப்பதாலும், பச்சைப் பயறு தானம் கொடுப்தாலும், 

விஷ்ணு சகஸ்வர நாம பாராயணம் செய்வதாலும் புதன் கிரக தோஷங்கள் நிவா்த்தியாகும்...

#தாிசனநேரம் : காலை 06.00 முதல் பகல் 01.00 வரை, மாலை 04.00 முதல் 09.00 மணி வரை..

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது..!

இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்...

காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும்...!

ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்...

புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும்..

எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பார்கள்... 

17 தடவை சுற்றி வந்து வழிபடுவதும் மிகவும் நல்லது...!!

3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன...

ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும்...

ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன...

பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத  கிரகம் என்று சொல்வார்கள்...

ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்...

திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்...

திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்...

சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு...

திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்...

திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்...

அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். 

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்...

இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை....

அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது...!

அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம்...!

அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன....!

நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதை பார்க்க முடியும். 

இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன...!

திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது...!

இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்...!

திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர்.....

நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள்....!

முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே..

இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்...!

இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் ...

விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்...

இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. 

ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்...!

காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. 

எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்...!

இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்டபத்தில் ஸ்தல லவரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது...!

நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது...!

திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன...!

ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது...!

ஆன்மீக சுற்றுலா வருபவர்கள் ..
மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது...!

பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது....!

எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது...!!

வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சென்று தரிசித்து வாருங்கள்....!


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.