Breaking News :

Wednesday, June 19
.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் சிறப்பு..!


தலத்தின் சிறப்பு:
நவகிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இங்கு மூலவர் தர்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புகள் இன்னமும் உள்ளது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை காணமுடியும். சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. இத்தலம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 114 வது சிவத்தலமாக அமைத்துள்ளது.  தருமபுரம் ஆதின நிர்வாகத்தின் கீழ் உள்ளது.


தல வரலாறு:
நிடதநாட்டு மன்னன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்து கொண்டான். அப்பெண்ணை தேவர்கள்  மணந்துகொள்ள விரும்பினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தால். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.இவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியதால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார். இதுவே இத்தலத்தின் வரலாறு.
 

தல பெருமை:
தர்ப்பாரண்யேசுவரர், அம்பிகை பிராணேஸ்வரி குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். திருமாலுக்கு குழந்தை இல்லாத வேளையில் தர்ப்பாரண்யேசுவரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவத்தை உருவாக்கினார். இந்த வடிவத்தை தேவாலயத்திற்கு எடுத்து சென்று வழிப்பட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளை பெற்றான்.
ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் போரில் வெற்றி பெற்றான். இந்திரன் இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியை பெற்று வந்தான். அதை திருவாரூரில் பிரிதிஷ்டை செய்தான். அதே போல் மேலும் ஆறு மூர்த்திகளை படைத்தான். அவற்றில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான்.  தியாகவிடங்கருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. தியாகவிடங்கரை வணங்கி வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருள்வார் என்று நமிக்கை.

தீர்த்தங்கள்:
திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே உண்மை. இத்தலத்தில் கோயிலை சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் என்ற தீர்த்த குளங்கள் உள்ளது.
தங்கக்கவசம்:
சனிப்பெயர்ச்சி மற்றும் விசேஷ காலங்களில் சனிபகவான் தங்க காக வாகனத்தில் தங்க கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனனை கண்டாலே எல்லாரும் ஓட்டம் பிடிக்கும் நிலைமையில் இருந்து, இங்கே தங்க கவசம் அணிந்த சனீஸ்வர பகவானை காண்பதற்கு அன்று கூட்டம் அலைமோதும்.


திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் இந்த மூன்று விசேஷ நாட்களில் இத்தலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஆலயம் திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.
பின்பு மாலை 4. 30 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.

பிராத்தனைகள்:
சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்க பிரம்மதீர்த்தத்திலும், கவி படும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் குளத்திலும் நீராடி பிராத்தனை செய்யவும்.

நேர்த்திக்கடன்:
வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறியதும் சனீஸ்வரபகவானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும்.

முகவரி:
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி  609 606.
 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.