Breaking News :

Sunday, October 13
.

சிரிக்க சிந்திக்க.. தேங்ஸ் டாக்டர்


வயது கோளாறு.
டாக்டர் என்ன பிரச்சினை உங்களுக்கு ?
எனக்கு என்ன வயசுன்னு தெரியாதது தான் பிரச்சனை டாக்டர்.
அப்படியா...!?
ஆமா டாக்டர் இப்ப பொண்டாட்டி புள்ள குட்டிகளோட வசதியாயிருந்தாலும் சின்ன வயசுல அப்பா அம்மா இல்லாமலயே வளந்துட்டதால வயசு தெரியல...
இப்ப என்ன உங்க வயசு தெரியனும் அவ்ளோதானே..?
ஆமா டாக்டர்... ஆமா...?
சரி இப்ப நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்... சிஸ்டர் இங்க வாங்க நான் சொல்றத எழுதிக்குங்க...
உங்க பேரென்ன...
ராமநாதன்...
என்ன தொழில் பண்றீங்க...
பைனான்ஸ்...
நைட்டு நல்லா தூங்குவீங்களா...?
கடவுள் புண்ணியத்துல படுத்தவுடனே தூங்கிடுறேன் டாக்டர்...
சந்தோஷம்... தூக்கத்துல கனவுலாம் வருமா...?
நெறய டாக்டர்....
அந்த கனவுல நடிகைகளெல்லாம் வர்றாங்களா...?
ஆமா டாக்டர்...
எந்த மாதிரி நடிகைங்க...
ரேவதி,அமலா மாதிரியான நடிகைங்க....
சிஸ்டர்... 45ன்னு நோட் பண்ணிக்குங்க... ம்...சரி வேற எந்த நடிகைகளும் வரமாட்டாங்களா...
சிலசமயம் அம்பிகா ராதா மாதிரியான வங்களும் வருவாங்க...
சந்தோஷம்... சிஸ்டர் 
48 ன்னு நோட்பண்ணிக்குங்க... ம்... அப்புறம் வேற யாரெல்லாம் வருவாங்க...?
ஷகிலா...
உஹூம்... ஷகிலாலாம் எவர்கிரின்..
அதவெச்செல்லாம் வயச கணிக்க முடியாது... வேற...வேற...?
வேற... சில சமயம் கனவுல ராதிகா வருவாங்க... திடீர்னு ஶ்ரீபிரியா க்கூட வருவாங்க...
ம்ம்... சிஸ்டர் 54ன்னு நோட் பண்ணிக்குங்க.. ம்... அப்புறம் ராமநாதன்..
அப்புறம்... அப்புறம்... ம்... என்னைக்காவது நான் ரொம்ப உற்சாகமா இருந்தா அன்னைக்கு கனவுல சிம்ரன்,நயன்ஸ் வருவாங்க...
சிஸ்டர் 40 ன்னு நோட் பண்ணிக்குங்க... ம் சொல்லுங்க ராமநாதன்...
ம்ம்... அவ்ளோதான் டாக்டர்...
அவ்ளோதானா... சரி சிஸ்டர் நான் சொன்ன நம்பரை யெல்லாம் சொல்லுங்க...
.
45,48,54,41..
நாலு ரிசல்ட்டையும் கூட்டி நாலால வகுத்தா வர்ற ரிசல்ட் 47.. மிஸ்டர் ராமநாதன் உங்க வயசு நாற்பத்தேழு...
அட கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க டாக்டர்...
என்ன கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டேனா...? அப்ப ஏற்கனவே உங்க வயசு தெரியுமா..?
தெரியும் டாக்டர்... பக்கத்து பார்பர் ஷாப்புக்கு முடிவெட்டிக்க வந்தேன் அங்கே ஒரே கூட்டம் ஒரு மணி நேரமாகும்னுட்டாங்க திரும்ப வீட்டுக்கு போகவும் மனசில்ல பக்கத்துலயே மனோதத்துவ டாக்டர் நீங்க சும்மா உக்காந்திருந்நீங்களா... அதான் சும்மா ஒரு டைம்பாசுக்கு... ரொம்ப தேங்ஸ் டாக்டர்..!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.