Breaking News :

Thursday, April 25
.

ஸ்ரீஜெயதுர்கா பீட ஆலயம்


 

இந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்!ஸ்ரீஜெயதுர்கா பீட ஆலயம்
பீடத்துக்குள் நுழைவதற்கு முன்பாக வாசலில் இருக்கும் பதிவு மையத்தில் நாம் நம் பெயரையும் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் நம் பெயர் பதிவேற்றப்பட்டு தொலைபேசி எண்ணுக்கு `வெல்கம் மெசேஜ்’ அனுப்பப்படுகிறது. அதோடு, ஒரு வாட்டர் பாட்டிலையும் ஆக்சஸ் கார்டையும் (Access card) பீட நிர்வாகிகள் நம்மிடம் தருகிறார்கள். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகளால் ஆன பீடத்திற்குள் நுழைய அந்தக் கார்டைக் காட்டினால்தான் கதவுகள் திறக்கின்றன.

தாம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள படப்பையில் எழிலோடும் அமைதியோடும் அமைந்திருக்கிறது ஸ்ரீஜெயதுர்கா பீட ஆலயம். 1994-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்தப் பீடம், ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் சார்ந்தும் பல்வேறு தொழில்நுட்பங்களோடு திகழ்வது சிறப்பு!

பீடத்துக்குள் நுழைவதற்கு முன்பாக வாசலில் இருக்கும் பதிவு மையத்தில் நாம் நம் பெயரையும் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் நம் பெயர் பதிவேற்றப்பட்டு தொலைபேசி எண்ணுக்கு `வெல்கம் மெசேஜ்’ அனுப்பப்படுகிறது. அதோடு, ஒரு வாட்டர் பாட்டிலையும் ஆக்சஸ் கார்டையும் (Access card) பீட நிர்வாகிகள் நம்மிடம் தருகிறார்கள். சுற்றிலும் கண்ணாடிக் கதவுகளால் ஆன பீடத்திற்குள் நுழைய அந்தக் கார்டைக் காட்டினால்தான் கதவுகள் திறக்கின்றன.

இந்தக் கோயிலில் எல்லாமே ஹைடெக்!
உள்ளே சென்றால், நாம் படப்பையில் இருக்கிறோமா கேரளாவில் இருக்கிறோமா... என்று நமக்குள் கேள்வி எழச் செய்கின்றன, பீடத்தின் அமைப்பும் அங்கு நிலவும் அமைதியும்!

பீடத்தின் நாயகியான ஜெயதுர்கா தேவியை தரிசிப்பதற்கு முன்பே சர்ப்பராஜ கணபதியையும், நாகராஜரையும் தரிசித்துவிடுகிறோம். அதேபோல் உள்ளேயும் பஞ்சாட்சர கணபதியும் உச்சிஷ்ட கணபதியும் அருள்பாலிக்கிறார்கள். உள்ளே நடுநாயகமாக சந்நிதி கொண்டிருக்கிறாள் ஜெயதுர்கா தேவி. அருகிலேயே துர்கை சித்தரும் காட்சியளிக்கிறார். மிக அற்புத தரிசனம்.

ராகு பகவானின் வழிகாட்டலோடு அவர் செய்த பூஜையில் சித்தர்கள் பலரும் கலந்துகொண்டார்களாம். அந்தப் பூஜையின்போது சைலபுத்ரி முதலாக நவதுர்கைகளும் ஒருவர் பின் ஒருவராகக் காட்சியளிக்க, நிறைவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரேதேவியாக- சிம்மவாஹினியாகக் காட்சி தர, அந்த தேவியிடம் சரணடைந்தார் ராகுபகவான். அன்னையின் தரிசனத்தால் அகமகிழ்ந்த சித்தர்கள், தேவியைப் பிரதிஷ்டை செய்யப்போவதாகச் சொன்னார்களாம். அப்போது ராகு பகவான், ‘‘நீங்கள் சிவனாரை வழிபடும் சித்தர்கள். துர்கையை வழிபடுவதற் காகவே சித்தர் ஒருவர் வருவார். அவர்மூலமே அம்பாளை பிரதிஷ்டை செய்ய முடியும்’’ என்றாராம். அதன்படியே துர்கை சித்தர் மூலமாக படப்பையில், ஜெய துர்கா பிரதிஷ்டை செய்யப்பட்டாளாம். துர்கை சித்தரே, துர்க்கைக்கு ராகு கால பூஜையே சிறந்தது என்பதை எடுத்துச் சொன்னவர் என்கிறார்கள் பக்தர்கள். ரேவதி நட்சத்திரத்தில் ஜெய துர்கையைப் பிரதிஷ்டை செய்த துர்கை சித்தர், அதே ரேவதி நட்சத்திரத்தில் தான் முக்தி அடைந்தார் என்றும் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள். ஆலயச் சிறப்புகளைக் கேட்டுச் சிலிர்த்தபடியே வலம் வந்தோம்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சித்தர் சந்நிதியில் அங்கப் பிரதட்சணம் நடைபெறுகிறது. பீடத்துக்குள் இருக்கும் துலாபாரத்தில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் முதலில் வேண்டிக்கொள்ளும்போது அரிசியையும் வேண்டுதல் நிறைவேறிய பிறகு வெல்லத்தையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.  இங்கே உண்டியல் கிடையாது.

பீடத்துக்குள் செல்வதற்கு ஆக்சஸ் கார்டைப் பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தோம் அல்லவா? அதேபோல், வெளியே வருவதற்கும் ஆக்சஸ் கார்டைப் பயன்படுத்தியாக வேண்டும். 

தரிசனம் முடிந்து வெளியே செல்லும்போது கண்ணாடிக் கதவின் அருகே ஒரு வெண்டிங் மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. அதில் நாம் கையில் வைத்திருக்கும் ஆக்சஸ் கார்டைக் காட்டினால் பிரசாதம் வந்து விழுகிறது. அக்மார்க் முத்திரையோடும் எக்ஸ்பைரி தேதியைக் குறிப்பிட்டும் தரமாகத் தயார் செய்யப்படுகிறது பிரசாதம்.  இப்படியான,  நவீனத் தொழில்நுட்பத்தைக் கோயிலில் பயன்படுத்தும் எண்ணம் எப்படித் தோன்றியது என நிர்வாகியான அஸ்வமித்ராவிடம் கேட்டோம்.

‘‘நான் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தபோது ஒரு தம்பதியின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. அங்கே, வெளியில் பிரசாதம் வழங்கிக்கொண்டிருந் தார்கள். பிரசாதம் தீர்ந்துவிடும் நிலையில் இருக்கவே மனைவி அதை வாங்கிவருவதற்காகப் புறப்பட்டார். கணவரோ, ‘தரிசனம் முடிந்த பிறகு பிரசாதம் வாங்கலாம்’ என்றார். மனைவியும் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர்கள் தரிசனம் முடித்த பிறகு பிரசாதம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. கோயிலுக்கு வருவது மனநிறைவை அடைவதற்குத்தானே தவிர, ஏமாற்றம் அடைவ தற்கில்லையே.

இதையொட்டியே பிரசாதம் அளிப்பதற்கும், கோயிலின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் எண்ணம் எனக்குத் தோன்றியது. காலை 6 மணி முதல் 12 மணி வரை; மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும். பக்தர்கள் ஆக்சஸ் கார்டைப் பயன்படுத்திக் கோயிலுக்குள் செல்லலாம், இதன் மூலமாக அவர்கள் எத்தனை மணிக்கு உள்ளே வந்திருக்கிறார்கள் என்று அறிய முடியும். கோயிலின் உள்ளே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. வெளியே செல்லும் இடத்தில் கார்டை ஒப்படைத்தால் கதவு திறக்கும். எனவே, இங்கே பக்தர்கள் எப்பொழுது வந்தாலும் மனநிறைவுடன் வீடு திரும்பலாம்” என்றார். 

உண்மைதான். நாமும் மனநிறைவோடும், தரிசனத்தால் கிடைத்த மகிழ்ச்சியோடும் விடைபெற்றோம்.
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியவளே!
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்!
கண்ணொளியதனால் கருணையேகாட்டிக்கவலைகள் தீர்ப்பவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!
இடர்தரும் தொல்லை இனிமேல்இல்லையென்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்!
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!
ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்காஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.