Breaking News :

Thursday, April 25
.

ஏழு தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்


சிவன் என்றால் தமிழில் “சிவந்தவன்” என்று பொருள். 

எந்த நேரமும் யோகநிலையில் இருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் கருதப்படுவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் இவர் அழைக்கப்படுகிறார்.

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். 

இவர் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம கடவுளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். 

சிவன் என்றால் மங்களகரமானவர், அருள்நிறைந்தவர், கருணைமிக்கவர் என்று பொருள்படும்.

இந்த அருள் நிறைந்தவரின் 
*ஓம் நமசிவயா* எனும் பஞ்சாட்சர மந்திரம்
உலகில் மிகவும் புகழ் பெற்றதும் சக்தி வாய்ந்ததும் கூட. 

அதே போல் பல மடங்கு சக்தியை கொண்டதாக  நம்முடைய 7 தலைமுறை 
சாபம், பாவங்களை நீக்குவதோடு நம் பெற்றோர்கள், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 
267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடிய மிக சக்தி வாந்த சிவ மந்திரத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்

ஏழு தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம் இதோ!

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்

இந்த மந்திரத்தை மாதம் தோறும் வரும் பிரதோஷ தினங்கள்,மற்றும் மாத சிவராத்திரி நாட்களில்ல் ஏதாவது ஒரு பழைய சிவ ஆலயத்தில் இருந்து ஒரே ஒரு முறை சொன்னால் போதும்.

இந்த சக்தி வாய்ந்த மந்திரம்
நாம் செய்த பாவங்கள் உடனே நீக்கும் சக்தி வாய்ந்தது.

மேலும் இந்த சக்தி வாய்ந்த மந்திரம், நம்முடைய பாவங்களை நீக்குவதோடு, 
நமது 7 தலைமுறைகளுக்கான சாபம்,மற்றும் நமது முன்னோர்களின் 7 தலைமுறைகளில்
சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடியதாக வாய்ந்தது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.