Breaking News :

Saturday, April 20
.

பித்ரு தோஷம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கிறதா என்பதை அறிய வேண்டுமா?


🌟 ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று கருட புராணம் கூறுகிறது. அத்தகைய கஷ்டத்தை பித்ரு தோஷம் என அழைக்கிறார்கள். ஆகவே, பித்ரு தோஷம் உள்ளவர்களின் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

🌟 குழந்தை பிறந்தவுடன் இறந்து போகும் நிகழ்வு நடைபெறக்கூடும்.

🌟 நல்ல நண்பர்களோடு விரோதங்கள் உண்டாகும்.

🌟 தந்தை, தாயாரை இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களும் நடைபெறும்.

🌟 பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.

🌟 இறை பக்தியில் ஈடுபட முடியாமல், வாழ்நாள் வீணாகக்கூடும்.

🌟 சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல், மனம் வேறுபட்டு வாழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியின்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.

🌟 அதர்மங்களையே செய்யத் தூண்டும் எண்ணம், மனம் முழுவதும் எழும்.

🌟 புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.

🌟 மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.

🌟 இதுபோன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் உங்களது வீட்டில் அதிகம் நடைபெற்றால், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்று கருட புராணம் கூறுகிறது.

🌟 இதுபோன்ற பிரச்சனைகள் நீங்க வேண்டுமானால், பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள்.

🌟 பித்ரு கடன் என்ன என்பதை கேட்டறிந்து, அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.

பரிகாரங்கள் :

🌟 அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுங்கள்.

🌟 அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். 

🌟 ஆதரவற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுங்கள். அன்று மாலை சிவன் அல்லது உங்களுக்கு பிடித்த தெய்வங்களின் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். எந்த தோஷமும் உங்களை நெருங்காது.

அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.