Breaking News :

Friday, April 19
.

திருமணப் பொருத்தங்கள் என்னென்னு தெரிஞ்சுக்கோங்க!


ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் நடக்க குறைந்தபட்ச பொருத்தங்கள் இருக்கணும்.

>> தினப் பொருத்தம்
>> கணப்பொருத்தம்
>> மாகேந்திரப் பொருத்தம்
>> ஸ்திரீ தீர்க்கம்
>> யோனிப் பொருத்தம்
>> இராசிப் பொருத்தம்
>> இராசி அதிபதி பொருத்தம்
>> வசியப் பொருத்தம்
>> ரஜ்ஜிப்பொருத்தம்
>> வேதைப் பொருத்தம்
>> நாடிப் பொருத்தம்
>> விருட்சப் பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களின் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

>> தினப் பொருத்தம் :
திருமணத் தம்பதிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடும் என்பதால் இது மிக முக்கியம்.

>> கணப் பொருத்தம்:

தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என்று 3 கணங்களின் பொருத்தமாகும்.  

>> மாகேந்திரப் பொருத்தம் :
செழிப்பான பொருளாதார வளத்தை குறிக்கும் பொருத்தமாகும்.

ஸ்திரீ தீர்க்கம் :
திருமணத் தம்பதிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ பார்க்கப்படும் மிக முக்கிய பொருத்தமாகும்.

>> யோனிப் பொருத்தம் :

திருமணத்துக்கு  பின்பு தம்பதிகளின் உடல் தேவை எந்த வகையில் பூர்த்தி செய்வார்கள். இருவருக்கும் முரண்பாடு ஏற்படாமல் இருக்க யோனி பொருத்தம் முக்கியம். 

>> ராசிப் பொருத்தம் :
தலைமுறைகள் விருத்தி செய்வதற்காக பார்க்கப்படும் மிக முக்கிய பொருத்தமாகும்.

ராசி அதிபதி பொருத்தம் :

சந்ததிகள் விருத்தி அடையவும், தம்பதிகள் இணக்கமாக வாழவும் பார்க்கும் பொருத்தம்.

>> வசியப் பொருத்தம் :

மணமக்கள் அன்போடும், நேசத்துடன் வாழ பார்க்கப்படும் பொருத்தம்.

ரஜ்ஜிப்பொருத்தம் :

வாழ்வின் உயிர்நாடி, பிரயாணத்தில் தீமை, பொருள் இழப்பு போன்றவை நிகழாமல் இருக்கவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் பார்க்கப்படும் மிக பொருத்தம்.

>> வேதைப் பொருத்தம் :
துக்கம், சோகத்தை நீக்க பார்க்கப்படும் பொருத்தமாகும்.

>> நாடிப் பொருத்தம் :

வம்சம் விருத்தியாகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க பார்க்கப்படும் பொருத்தம்.
 
>> விருட்சப் பொருத்தம் :

தம்பதிகள் இருவரில் ஒருவருக்காவது பால் மரம் இருக்க வேண்டும்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.