Breaking News :

Saturday, April 27
.

வேதாளத்தின் வரலாறு தெரியுமா ?


உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான்  புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்  இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று.

 புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான் அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான்  ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது  பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது ஞாபகம் வந்தது  இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான் 

 அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார்  அது கைலாயத்தின் வாசலில் படுத்திருந்த புட்பதத்தன் காதுகளில் விழுந்துவிட்டது மறுநாள் ஈசனிடம் சென்று தான் கொண்டுவந்த ஆடைகளை கொடுத்துவிட்டு ஆசிபெற்ற புட்பதத்தன் நேற்று இரவு தான் கைலாய வாசலில் படுத்திருந்ததையும், சிவன் கூறிய தேவ ரகசியத்தை கேட்டு விட்டதையும், அப்போதிருந்தே தன் மனம் படாதபாடு படுவதையும் கூறினான்  தேவ ரகசியத்தை கேட்டு விட்டதால் கோபமுற்றார் சிவபெருமான் இருப்பினும் அவன் உண்மையை கூறியதால் அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கூறக்கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினார்  சனி பகவானின் அருளைப் பெற சொல்ல வேண்டிய சனி மந்திரங்கள்  சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான் 

 அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான்  இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது  தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும்  ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும்  ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார் 

 பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான்  அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி  அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான் அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார் அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி  காளி கோவிலுக்கு அழைத்து வந்து  அவர்களை பலிகொடுக்க தொடங்கினான்

இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான்  விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன்  விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும் அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான் 
 
விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான் வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான் 

 முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான் அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது இசை வந்த திசைநோக்கி நடந்தான்  அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள்  அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய்  என்று கேட்டான் விக்கிரமாதித்தன் 

 அந்த பெண் வேறு யாருமல்ல தேவ ரகசியத்தை கேட்ட புட்பதத்தனின் மனைவி தேவதத்தை அவள் தன் கதையை விக்கிரமதித்தனிடம் கூற  அவள் மேல் இரக்கம் கொண்டான் விக்கிரமாதித்தன்  தங்களுடைய சாபம் தீர என்ன செய்ய வேண்டுமென்று தேவதத்தையிடம் விரும்பினான் அதற்கு தேவதத்தை நானும் வேதாளமாக தொங்கிகொண்டிக்ருக்கும் என் கணவரும்  காட்டிற்குள் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டால்  எங்கள் சாபம் நீங்கும்  ஆனால் என் கணவரை அந்த முருங்கை மரத்தில் இருந்து இறக்கி காளி கோவிலுக்கு அழைத்து வருவது இயலாத ஒன்று என்றுகூறி அழுதாள்  அது எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் நான் அதனை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றான் விக்கிரமாதித்தன் 

 சுடுகாட்டிற்கு சென்ற விக்கிரமாதித்தன்  அங்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை கட்டி முதுகில் போட்டுக்கொண்டான்  அதுவரை அமைதியாக இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச தொடங்கியது 

  நாம் கோவிலுக்கு செல்லும் வரை நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது  அதேநேரம் நான் ஒரு கதை சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்பேன்  அதற்கு பதில் தெரிந்தும் நீ கூறவில்லை என்றால்  உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று கூறியது 

  விக்கிரமாதித்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க அவர்களின் பயணம் தொடங்கியது 

 விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான்  இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி 
கேட்டது அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது  பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும்  பதில் கூறவில்லை என்றால் இவன் தலை வெடித்து சிதறிவிடும் என்ன செய்யலாம்  என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான் 

 தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம்.

 இதேபோல 24 முறை கதை சொல்லி  மீண்டும்  மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம் 

மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன்  இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான்  விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை 
 சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும்  தேவதத்தையும்  சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது 

 சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு  முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன்  அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான் 

 அப்போது அங்கு தோன்றிய காளி தேவி  விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது  உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள் என்று கூறினாள் 

அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அனைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார்  காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு  அவனையும் அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார் .

சிவ ஓம் நமசிவாய.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.