Breaking News :

Friday, October 04
.

இருதயத்தைக் காக்கும் இருதயாலீஸ்வரர்


இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது இருதயாலீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோவில் சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற திருத்தலத்தில் காணப்படுகிறது. இங்கு லிங்க ரூபமாய்க் காட்சி அளிக்கும் சிவபெருமான் அருள்பாலிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.

சிவன் இருதயாலீஸ்வராக எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம். சிவன் இங்கு மட்டும் இருதயத்தைக் காப்பதாகக் கூறுவதற்கு ஓர் சுவையான புராணக் கதை உள்ளது.

சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்ற அவா ஏற்றப்பட்டது பூசலாருக்கு. எனவே அவரது சிந்தையில் உதித்த சிவனுக்கு கற்பனையாலேயே திருக்கோவிலைக் கட்டத் தொடங்கினார்.

பின்னர் தியானத்தில் அமர்ந்த அவர், ஆகம விதிகளின்படி ஆலயம் அமைய வேண்டும் என்பதால் பாவனையிலேயே கோவில் அமைக்கும் ஸ்தபதிகளை வரவழைத்துக் கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார். பிராகாரங்களை எழுப்பினார். தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளைக்கூடச் சிந்தனையிலேயே செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கையிலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் உருக வேண்டினார்.

அதே காலகட்டத்தில் காஞ்சியில் சிவனுக்கு ஒரு கோயிலைச் சிறப்புறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். மன்னன் அமைத்த கோவில் அல்லவா? இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த கும்பாபிஷேக நாளுக்கு முதல் நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பியுள்ள ஆலயத்தில் எழுந்தருளப் போவதால், வேறொரு நாளில் பல்லவன் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவ மன்னன் பல ஆண்டுகள் இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தின் சிறப்பை அறிய விரும்பினான். பின்னர் தான் நிர்மாணித்த ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு மந்திரி பிரதானிகள் புடைசூழ திருநின்றவூரை அடைந்தான் பல்லவமன்னன்.

ஊரோ பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது. மன்னன் திடீரென்று வந்ததால் ஊர் மக்கள் கூடினர். அவர்களிடம் பூசலார் குறித்தும் அவர் நிர்மாணித்த திருக்கோவில் குறித்தும் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடி யில் உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் ஏதும் கட்டின மாதிரி தெரியலையே ’’ என்று பதில் கிடைத்தது.

பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வீசியது. அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவராலும் காண முடிந்தது. நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் சிவன் அனைவரும் பார்க்கக் குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியத்தினை மன்னனுடன், ஊர் மக்கள் கண்டனர். பல்லவ மன்னனோ, அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிலவுலகில் நிர்மாணிக்க அனுமதி கோரினான்.

பூசலார் சம்மதித்ததால் இததிருக்கோவிலை மன்னன் நிர்மாணித்தான். திருநின்றவூரில் - சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலை இன்றும் காணலாம். பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் சிவனுக்கு இருதயாலீஸ்வரன் என்று பெயர். அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை.

இருதய நோய்இருதயாலீஸ்வரர் திருக்கோயில்பூசலார்

தலபெருமை:
சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு. பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பக்தி மிக்க இதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

தல வரலாறு:
நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் தலத்தில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார்.

மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது.

இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை. மனம் காற்றை விட வேகமானது என்பர். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலைக் கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்த கோயிலை கட்டினார்.

இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். மன்னன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்காக காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், “”நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி தான். ஆனால், இதே நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிஷேகத்தை வைத்து கொள்,”என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார் என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அது பற்றி தெரியவில்லை.

பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, “”நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் கூறினார். அதை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்,”என்றான். மன்னன் சொன்னதை கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

“”அரசே! சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டுமளவு என்னிடம் வசதி இல்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி, இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன். இதைத்தான் சிவன் உங்களிடம் கூறியுள்ளார்,”என்றார். இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அன்பினால் மனதில் கட்டும் கோயிலுக்கும், பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியையும் அடைந்தார் அவர். சிவபெருமான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டினான்.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு.
இருதயத்தைக் காக்கும் இருதயாலீஸ்வரர்:-
பூசலார் நாயனார் கட்டிய மனக்கோவிலில் எழுந்தருளி  இதயம் சம்பந்தமான நோய்கள் குனமடைய இறையருள் புரியும் இருதயாலீஸ்வரர்!
பூந்தமல்லியில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி மரகதாம்பாள் அருள்பாலிக்கிறாள். இந்த ஆலயத்தில் அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலத்து இறைவன், இறைவி, பூசலார், முருகப்பெருமான் ஆகியோர் சன்னிதியில் நெய்தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட்டால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில்கள் திருநின்றவூர் வழியாகச் செல்கின்றன. பூந்தமல்லியில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பூசலார் நாயனார்:-
சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் தனது திருமேனி முழுவதும் திருநீற்றை பூசிக்கொண்டு, ‘நமசிவய’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார் ஒரு அடியவர். இது தினந்தோறும் நடைபெறும் ஒரு சம்பவம்தான். எப்போதும் திருநீறு பூசிய கோலத்திலேயே காட்சியளித்த அவரை, ஊர் மக்கள் ‘பூசலார்’ என்றே அழைத்தனர்.
கோவில் கட்ட ஆசை:-
மிகப்பெரிய கோவில் ஒன்றைக் கட்டி, அதனுள்ளே சிவபெருமானை வைத்து வணங்கிட வேண்டும் என்பது பூசலாருக்கு நீண்ட நாள் ஆசை. கையில் கொஞ்சமும் பணம் கிடையாது. ஆனால் வளமான மனம் இருக்கிறது. சிவபெருமானுக்குப் பெரிய கோவில் கட்ட வேண்டும் என்ற தனது எண்ணத்தை பூசலார் வெளிப்படுத்தியபோது, அதைக் கேட்டவர் எள்ளி நகையாடினர்.
‘அதற்கெல்லாம் அதிக பணம் வேண்டும். தினமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நீ எப்படி கோவில் கட்ட முடியும். அந்த எண்ணத்தை விட்டு விட்டு, எப்போதும் திருநீற்றையே பூசி இறைவனை வழிபட்டுக் கொண்டிரு!’ என்றனர்.
மனதில் கட்டிய கோவில்!
மன வருத்தத்தில் கொஞ்சம் சோர்ந்து விட்டார் என்றாலும், ஈசனுக்கு கோவில் கட்டும் எண்ணத்தை அவர் கைவிட்டு விடவில்லை. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதை அவர் உணர்ந்திருந்தார். இறைவனுக்கு கோவில் கட்டும் பணியை நனவில் நிறைவேற்ற முடியவில்லையே தவிர, அதை தன் மனதில் கனவுக் கோவிலாக கட்டும் பணியில் ஈடுபட்டார்.
ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்தவாறு, சிவன் மீது சித்தத்தை வைத்து, தன் மனதிற்குள்ளேயே ஆலயப் பணியைத் தொடங்கினார். தன் மனதால் பொருள் சேர்த்தார். இடம் தேர்வு செய்தார். ஆகம விதிப்படிக் கோவில் கட்ட ஆரம்பித்தார். சிற்பிகள், சாத்திர வல்லுநர்கள், தொழிலாளிகள் அனைவரையும் தன் மனதாலேயே தேர்வு செய்தார். சிற்ப சித்திர வேலைப்பாடுகள் அனைத்தையும் தன் மனதால் வடிவமைத்தார்.
திருக்குளம், கொடிமரம், இறைவன் உருவம் அனைத்தும் கற்பனையிலேயே வடித்து முடிக்கப்பட்டது. ஆலயத்தைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வதற்கான நாளையும் மனதிற்குள்ளேயே குறித்து விட்டார் பூசலார். சிறந்த பக்தியை கொண்ட பூசலாரின் பூஜை முறையை உலகத்திற்கு உணர்த்த ஈசன் திருவுளம் கொண்டார்.
மன்னனின் கனவில்:-
இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் பல்லவ மன்னன் காடவர்கோன் ராஜசிம்மன் கயிலாசநாதருக்கு அழகிய கற் கோவில் எழுப்பி முடித்திருந்தான். மறுநாள் விடிந்தால் கும்பாபிஷேகம். மனது நிறைந்திருக்க படுக்கையில் சற்று கண் அயர்ந்தான் ராஜசிம்மன். அன்றைய தினம் இரவு அவனது கனவில் ஈசன் தோன்றினார்.
‘மன்னா! நீ நாளை கும்பாபிஷேகம் செய்யப் போகும் கோவிலுக்கு நான் வரப்போவதில்லை. நாளை திருநின்றவூரில், என் அன்பன் பூசலார் கட்டிய கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இருக்கிறார். நான் அங்கே செல்ல
 வேண்டும். நீ வேண்டுமானால் கும்பாபிஷேக தேதியை வேறொரு நாளுக்கு மாற்றிக்கொள்!’ என்று கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். தனது கயிலாச நாதர் கோவில் கும்பாபிஷேக பணியை உடனே நிறுத்த ஆணைப் பிறப்பித்தான்.
‘ஈசனையே பிரமிக்க வைத்த பூசலார் கட்டியக் கோவிலைக் காண புறப்படுங்கள்’ எனக் கூறி, மனைவி மக்கள், உறவினர், அமைச்சர்கள், புடை சூழ அந்த இரவிலேயே திருநின்றவூருக்கு புறப்பட்டான். அதிகாலைப் பொழுது புலரும் வேளையில் மன்னன் திருநின்றவூர் எல்லையை அடைந்தான். திருநின்றவூரில் எந்த ஆலயமும் இல்லை. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதயத்தில் இறைவன்:-
மன்னனுக்கு ஒரே குழப்பமாக போய்விட்டது. ஊர்மக்களிடம் விசாரித்தான். அவர்களோ, ‘என்ன! பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா?. அவர் ஒரு பரம ஏழை. ஆனால் பரமேஸ்வரனின் பரம பக்தன். அதோ அங்கு தெரியும் இலுப்பை மரத்தின் அடியில்தான் பல மாதங்களாக தியானத்தில் இருக்கிறார்’ என்று கூறினர்.
மன்னன் பூசலார் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். பூசலாரைக் கண்டான். இருவரும் ஒருவரையொருவர் வணங்கிக்கொண்டனர்.
மன்னன் பூசலாரிடம், ‘அன்பரே! பரமனுக்கு தாங்கள் எழுப்பிய ஆலயம் எங்குள்ளது?’ எனக் கேட்டான்.
‘நல்ல நேரத்தில் வந்தீர்கள்! நான் கட்டிய ஆலயத்தில் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைக் கண் குளிரக் காண என் இதயத்தைப் பாருங்கள்’ என்று கூறி தியானத்தில் ஆழ்ந்தார் பூசலார். அவரது இதயத்தை நோக்கிய மன்னன் வியப்பில் வாயடைத்துப் போனான்.
எங்கும் நிறைந்த ஈசன், பூசலாரின் இதய இருக்கையில் பார்வதி தேவியுடன் காட்சியளித்தார். பூசலாரின் இதயத்தில் அவர் கட்டிய கோவில் தெரிந்தது. வேதமும், வேள்வியும், தேவாரமும், நாதஸ்வர ஒலியும் ஒலிக்க அந்த இதயக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதயக் கோவிலின் உள்ளே உறைந்த அந்த ஈசனின் பெருக் கருணையை எண்ணி வியந்தான் மன்னன். அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய பூசலாரின் திருவடி பணிந்தான்.
கனவு நனவானது!
பூசலாரின் இதயத்தில் தான் கண்ட கோவிலை, அப்படியே திருநின்றவூரில் கட்டி முடித்தான் ராஜசிம்மன். அதன் கும்பாபிஷேகம் முடித்த பின்பே, தான் காஞ்சீ     புரத்தில் கட்டிய கயிலாசநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினான். பூசலார் இதயத்தில் கட்டிய கோவில் என்பதால் இந்த ஆலய இறைவன் ‘இருதயாலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
இறைவனது கருவறை தூங்காணை மாட வடிவில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தின் மேல் இருதய வடிவில் விதானம் நான்கு பிரிவுகளுடன் அமைந்துள்ளது. எல்லா ஆலயங்களிலும் கருவறையில் தனித்து இருக்கும் ஈசன், இங்கு பூசலார் நாயனாருக்கு இடம் தந்துள்ளார். ஈசனுக்கு அளிக்கப்படும் அத்தனை உபசாரமும் பூசலாருக்கும் உண்டு.
இதய நோய் தீர்க்கும் ஸதலம்!
இருதய நோயாளிகள் பலரும் இக்கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு. 
பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.   
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பக்தி மிக்க இதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.   தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வழிபட்டால் இருதயம் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.