Breaking News :

Thursday, September 12
.

வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை


*ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வந்தால்,வெற்றிலை மாலை சார்த்தி பிரார்த்தித்து வந்தால்,
*நவக்கிரக தோஷங்கள் 
அனைத்தும் விலகும்.*

*சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.*

*’வெற்றியைத்தரும் கடவுளாக, வீரத்தை வழங்கும் கடவுளாக, காரியத்தை ஜெயமாக்கித் தரும் வள்ளலாக’
பார்க்கப்படுகிறார் - போற்றப்படுகிறார் ஸ்ரீஆஞ்சநேயர்.*

*வாயுவின் மைந்தன் என்றும் அஞ்சனை மைந்தன் என்றும் போற்றப்பட்டாலும் தான் ஸ்ரீராமரின் பக்தன் என்று சொல்வதில் அளப்பரிய ஆனந்தம் கொள்பவர் அனுமன் என்கிறது புராணம்.*

*ராமபக்தனாகவும் ராம தூதனாகவும் தன்னைச் சொல்வதில் நிறைவு கொள்ளும் ஸ்ரீஅனுமன் சகல வல்லமைகளையும் பராக்கிரமங்களையும் கொண்டவர்.*

*அதேசமயம் அபய முத்திரை காட்டி பக்தர்களுக்கு அருள் வழங்கும் திருக்கோலத்தில் நில்லாமல் இருகரங்களையும் கூப்பிய நிலையில்,
ஸ்ரீராமரையும் சீதாபிராட்டியையும் வணங்குகிற நிலையிலேயே பல க்ஷேத்திரங்களில் திருக்காட்சி தந்தருளுகிறார் அனுமன்.

*’செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில்’

*அனுமனை வழங்குவது விசேஷமானது மட்டுமல்ல மகத்துவமானது என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

*குறிப்பாக 
அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு செலுத்தி வேண்டிக்கொள்வது எண்ணிலடங்காத நன்மைகளை வழங்கவல்லது.

*அதேபோல் துளசி மாலையும் - வடை மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்வது காரியங்களை வீரியமாக்கி வெற்றியைக் கொடுக்கும்.

*இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில்,

*ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது தடைப்பட்ட காரியங்களை வெற்றியாக்கிக் கொடுக்கும்.

*மனதில் உள்ள இனம்புரியாத ஏக்கங்களையும் குழப்பங்களையும் பயங்களையும் போக்கும் என்கிறார் ஸ்ரீநிவாஸ பட்டாச்சார்யர்.

*தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையோ அல்லது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையோ தொடர்ந்து ஒன்பது வாரம் ஆஞ்சநேய பெருமானுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால் வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறலாம்.

*தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும்.

*வெற்றிலை மாலை சார்த்தி அஞ்சனை மைந்தனை வேண்டிக்கொள்ளுங்கள்.*
*வேதனைகள் அனைத்தையும் போக்கி அருளுவார்.!

*”ஶ்ரீ ஆஞ்சநேய பகவான் 
மலர்பாதங்கள் போற்றி..!!”*

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.