Breaking News :

Saturday, April 20
.

கண் திருஷ்டி படாமல் இருக்க நிரந்தரத தீர்வு?


பொதுவாகவே, நமக்குக் கிடைக்காத ஒரு பொருள், அடுத்தவருக்கு கிடைக்கிறது என்றால், அதைப் பார்க்கும் மனித பிறவிக்கு கட்டாயம் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டு சென்று விட்டால் பரவாயில்லை, ஏதோ அதிர்ஷ்டம் வந்து விட்டது. ஒரு வருடத்தில் இருந்து, இரண்டு வருடத்திற்குள் வெறும் பைக் மட்டுமே வைத்திருந்த நீங்கள், புதியதாக கார் வாங்கி விட்டீர்கள். வாடகை வீட்டில் குடியிருக்கும் நீங்கள், சொந்தமாக நிலம் வாங்கி இருக்கலாம். உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது படிப்படியாக, விரைவாக நடக்கும்.

இதைப் பார்க்கும் உங்களுடைய நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு, நெருங்கிய நண்பர்களுக்கும் கூட, மனதிற்குள் ஒருவிதமான கஷ்டமான நெருடல் உண்டாகும். நம்மால் இப்படி விரைவாக முன்னேற முடியவில்லையே என்று! அந்த ஒரு , அவர்களுடைய அந்த ஏக்கமே உங்களுடைய முன்னேற்றத்துக்கு தடையாக மாறலாம். இதையெல்லாம் தாண்டி வயிற்றில் எரிச்சலும், பொறாமையும் என்பது வேறு. நம்மால் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, வருவதுதான் இந்த பொறாமையும், வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும். இதனால் சில பேருக்கு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட பாதிப்புகள் உண்டாகும்.

இந்த எதிர்ப்புகளில் இருந்து கட்டாயம் யாராலும் தப்பிக்கவே முடியாது. அந்த எதிர்மறை ஆற்றல் உங்களை தாக்கும் போது, உங்களின் முன்னேற்றம் கட்டாயம் தடைபடதான் செய்யும். இதற்கு ஆன்மிகத்தில் சில வழிபாட்டில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

பொதுவாகவே உக்கிரமான தெய்வங்கள், அதாவது கோபத்தோடு இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு, எதிர்ப்புகளை தடுக்கும் சக்தி அதிகம் என்று சொல்லுவார்கள். எடுத்துக்காட்டாக, பத்திரகாளி அம்மன், வாராஹி அம்மன், துர்க்கை அம்மன், அங்காள பரமேஸ்வரி, இப்படிப்பட்ட தெய்வங்களை செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி தினத்திலும் தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.

அதிலும் குறிப்பாக எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால், எதிரிகளின் எதிர்ப்பு, பொறாமை, கண் திருஷ்டி, நம்மை தாக்காமல் இருக்கும். தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையை இயல்பாக வாழ்வதற்கு இந்த வழிபாடு துணையாக நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்குறிப்பிட்டுள்ள இந்த நான்கு தினங்களிலும் அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவரை 11 எலுமிச்சைப் பழங்கள் கோர்க்கப்பட்ட மாலையிலிருந்து, 108 எலுமிச்சை பழங்கள் கோர்க்கப்பட்ட மாலை வரைக்கும் போடலாம். ஒற்றைப்படையில் எலுமிச்சைபழ மாலை அமையவேண்டும். எண்ணிக்கை என்பது, அவரவருடைய விருப்பம்.

இதில் எதுவுமே உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி கொள்ளுங்கள். அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். அந்த எலுமிச்சையை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் மூலம் அல்லது சொந்தபந்தம், நண்பர்கள் இவர்களின் பொறாமை குணத்தின் மூலம் எனக்கும், என் குடும்பத்திற்கும், நான் செய்யும் தொழிலிலுகக்கும், எனது வருமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வரவே கூடாது என்று வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை சூலத்தில் குத்தி விட்டு வர வேண்டும். அவ்வளவு தான்.

ஒரு வாரமுமோ அல்லது இரண்டு வாரமுமோ இந்த பரிகாரத்தை, இந்த வழிபாட்டு முறையை செய்துவிட்டு பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இந்த வழிபாட்டை நிரந்தரமாக உங்களது வாழ்க்கையில் பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உக்கிரமான எந்த அம்மன் கோவிலுக்கும் செல்லலாம். உக்கிரமான அம்மன் கோவில் இல்லை என்றால் பரவாயில்லை. துர்க்கையம்மன் சன்னிதானமானது எல்லோரது வீட்டின் அருகிலும் கட்டாயமாக இருப்பார்கள். துர்க்கை அம்மனை மேற்குறிப்பிட்டுள்ள முறையில் வழிபாடு செய்து வாருங்கள்.

அம்மன் கோவில் இல்லையா, எல்லை தெய்வங்களான அய்யனார், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் இப்படிப்பட்ட காவல் தெய்வங்களுக்கு, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, காவல் தெய்வங்களுக்கு முன்பாக இருக்கும் வேலில், எலுமிச்சை பழத்தை குத்தி வணங்கினாலும், நல்ல பலன் உண்டு..


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.