Breaking News :

Saturday, September 23
.

மேலே உயரே உச்சியிலே: புத்தக விமர்சனம்

அமுதம் புக்ஸ் வழங்கும் சிறந்த 
தன்னம்பிக்கை நூலின் சில வரிகள் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக....

இன்றைய பரபரப்பான அவசர காலச்சூழலிலும் ஒவ்வொருவரும் வாழ்வில் அவரவர் பணிகளில், தொழில்களில், நிலைகளில் மென்மேலும் உச்சம் தொட....

ஓடிக் கொண்டும் தேடிக் கொண்டும் இருக்கிறோம். இதற்கான வழிமுறைகளை தேடல்களை வாசிக்க எளிமைப்படுத்தி தமிழ் கூறும் நல்லுலகிற்கு புதிய முயற்சியாக...

முத்தான 37 கட்டுரைகளில் 340 பக்கங்களில் முத்திரை பதித்து அழகுற  செதுக்கி இருக்கிறார் நூலாசிரியர் இறையன்பு.

பண்டைய தமிழ் சமூகத்தில் நம்முடைய இலக்கியங்களையும் இதிகாசங்களையும் வாசிப்பது  மனிதர்களுக்கு  வெறுமனே பொழுதைப் போக்க மட்டுமல்ல...

வாழ்வை சிறப்பானதாக ஆக்கவும் வாழ்வில் உச்சம் தொடவும் நமக்கு கற்றுத்தருகிற ஆற்றல் படைத்த பொக்கிஷங்கள்

வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வேறுபட்ட புதிய கோணத்தில் அணுகி அவற்றிற்காக தீர்வை அறியும் பொருட்டு....

நம்முடைய மூளையை சலவை செய்து செம்மையாக்கும் முயற்சியை அவை மயிலிறகால் வருடுவது போல மௌனமாக ஆற்றுப்படுத்துகின்றன. 

அவற்றை வெறும் கதையம்சத்திற்காகவோ, இலக்கிய நயத்திற்காகவோ மட்டும் வாசிப்பது என சிலர் ஒரு பக்கமிருந்தாலும்...

மனதில் ஊன்றிப் படித்து அவற்றில் உள்ள மறை பொருளை பலரும் உள்வாங்கிக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

மேற்கில் படைப்புத்திறன் குறித்த பயிற்சிகள் இன்று பரவலாகக் கையாளப்படுகின்றன. 

இந்த உத்திகளை நாம் இலக்கியங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புற விடுகதைகள், புதிர்கள் போன்றவற்றைத் தீவிரமாகப் படித்தாலே தெரிந்துகொள்ள முடியும். 

சிந்திப்பதை யாரும் கற்றுத்தர முடியாது. அதற்கு நாம்தான் பயிற்சி செய்ய வேண்டும்.

சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு இவற்றை அறிமுகப் படுத்தி அவர்களாகவே இவற்றிற்கு விடை தேடும்படிச் செய்வது மிக அவசியம். 

கல்வியில் இது சாத்தியமா..?  என்பது பற்றி எல்லாம் கவலைப் படாமல் பெற்றோர்கள் இப்படிப்பட்ட முயற்சிகளைக் குழந்தைகளின் முன் வைத்து...

அவர்களைப் பக்குவப்படுத்தி சமூகத்திற்கு நல்ல மனிதர்களாக அடையாளப் படுத்துவது  காலத்தின் கட்டாயம் என்பதை மறவாதீர்கள்.

நம் இந்திய இதிகாசங்கள் எத்தனையோ சவால்களுக்கு சாதுர்யமாக விடை கண்டு பிடிக்கும் வழியை கற்றுத் தந்திருக்கின்றன.

கிழக்கத்திய மரபுக்கதை முதல் நகைச்சுவை கதை வரை நீண்டு செங்குத்தாக செல்வதால் மட்டும் விடை கிடைக்காது.

வளைய வேண்டிய இடத்தில் வளைவதும் குணிய வேண்டிய நிலையில் பதுங்குவதும்...

சவால்களில் நீள அகலங்களை தாண்டி உள்ளுணர்வை பகிர்வது அவசியம் என்பதை...

இந்நூலில் வாசிக்கும் போது வியந்து போவீர்கள் மிதமான விலையில் ஓர் பொக்கிஷம் என்றால் மிகையாகாது.

பெட்டிக்கு வெளியே சிந்திப்பது எவ்வாறு மரபின் தொடர்ச்சியாக நீட்சியடைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் வெற்றிகளை அள்ளி குவித்திருக்கிறார்கள்.

தான் கற்றவற்றை மட்டும்     பயன்படுத்தியவர்களுக்கு தலைமை பொறுப்பைத் தருவது காயடிக்கப் பட்டவர்களுக்கு காயகல்பம் தருவதைப் போல பயனற்றது என்கிறார்.

நிறைவாக வாழ்வில் வானமே எல்லை என போராட, வெற்றிவாகை சூட, உச்சம் தொட துடிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய சக தோழமைகளுக்கு  பரிசளிக்க வேண்டிய நன்னூல்களில் இதுவும் ஒன்று மறவாதீர்கள்..!

நகரில் நல்ல நூல்களின் நந்தவனம் அமுதம். இதன் பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும்.

உங்களின் ஒரு அழைப்பு இல்லம் தேடி உங்களை நாடி நூல்கள் வர ஏதுவாகும் தோழமைகளே....

             AMUTHAM BOOKS, MTP
        98 430 24 980 & 94 864 11 900

.
.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.