Breaking News :

Saturday, April 20
.

மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு


கேரளா ஸ்டேட் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் வில்லேஜைச் சேர்ந்தவர் ஆர் பாபு. இவர் அங்கு இருக்கும் குறம்பாச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் தனது மூன்று நண்பர்களுடன் அவர் அங்கு மலையேற்றம் செய்து இருக்கிறார். ஆனால் மலையில் ஏறிவிட்டு இறங்கும் போது பாபு தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் முகடு ஒன்றில் குதித்து தப்பிச்சு இருக்கார். அதாவது மலைக்கு நடுவே குகை போல இருக்கும் அமைப்பு ஆகும் இது. ஆள் செல்ல முடியாத இந்த இடத்தில் பாபு தவறி கீழே விழுந்துருக்கார் 

பிப்ரவரி 7ம் தேதி உள்ளே விழுந்தவர் கடந்த 43 மணி நேரமாக அந்த மலை முகட்டில் சிக்கி தவிச்சிக்கிட்டு இருந்தார். முதலில் அவரை மீட்க அவரின் நண்பர்கள் அங்கு கிடைச்ச குச்சி, கம்புகள், கயிறுகளை வைத்து அவரை மீட்க முயன்று உள்ளனர். ஆனால் முடியலை. இதையடுத்து கீழே வந்த நண்பர்கள் உள்ளூர் ஆட்களிடமும், தீயணைப்பு துறையிடமும் தெரிவிச்சாய்ங்க.

இதை அடுத்து பிப்ரவரி 7ம் தேதி இரவு 12 மணிக்கு தீயணைப்பு படையினர் அங்கு வந்து கேம்ப் அமைத்தனர். அவரை மீட்கும் பணி இரவில் இருள் காரணமாக செய்யப்படலை. மறுநாள் தொடங்கப்பட்ட மீட்பு பணி ஓயாமல் நடைபெற்று, ஒரு வழியாக அந்த மாணவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.அந்த பாபு இருக்கும் முகட்டு பகுதி யாராலும் எட்ட முடியாத இடத்தில் இருந்ததால் காப்பாற்றுவதற்கு தாமதம் ஆகி உள்ளது. 

ஆரம்பத்தில் கயிறு மூலம் அவரை தொட முடியாததால் அவரை காப்பாற்ற கொச்சி கடலோர காவல் படை ஹெலிகாப்டர் களமிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் வந்தும் கூட அவரை காப்பாற்ற முடியாமல் மீட்புத்துறையினர் திண்டாடினாங்க. 

மலை முகடு கரடு முரடாக இருப்பதால் ஹெலிகாப்டர் பாபு இருக்கும் பகுதிக்கு அருகில் செல்ல முடியவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து பாலக்காடு ஆட்சியர் கடற்படையின் உதவியை நாடினார். கடற்படை பயன்படுத்தும் நவீன ஹெலிகாப்டர்களை வைத்து அவரை மீட்க கோரிக்கை விடுத்த நிலையில்  ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக களமிறங்கியது. ஹெலிகாப்டரில் இருந்து கயிறை வீசி அதை பிடித்து மேலே வரும்படி பாபுவிற்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார். ஆனால் மலை முகட்டில் இருந்து கயிறை பிடிக்க முடியாத காரணத்தால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இதனிடையே அந்த மலைமுகட்டிற்கு அருகே இருக்கும் பகுதிக்கு ராணுவத்தினர் சென்றுள்ளனர். அங்கிருந்து கயிறு மூலம் அந்த இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது. அதேபோல் தண்ணீரும் அந்த இளைஞருக்கு வழங்கப்பட்டது. அவர் அருகில் சென்ற ராணுவத்தினர், நீங்கள் இனி தண்ணீர் கேட்டு கத்த வேண்டாம் . அது உங்கள் எனர்ஜியை மேலும் போக்கும். நீங்கள் கவனமாக இருங்கள். உங்களை காப்பாற்றி விடுவோம் என்று கூறி உள்ளனர். 

ஹெலிகாப்டர் முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைய, மலைகளில் ஏறும் பயிற்சி எடுத்த சிறப்பு ராணுவ படை வீரர்கள் இந்த மீட்பு பணியில் குதித்த பிறகே அவரை காப்பாற்ற முடிந்தது. மலையில் ஏறும் வீரர்கள் கயிறு வைத்து ஏறி பாபுவிற்கு அருகே சென்று அவரை மீட்டு அழைத்து வந்துள்ளனர். பாபு ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவருக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.