Breaking News :

Friday, April 19
.

நெடுஞ்சாலை நடுவே இந்த செடி வெக்க என்ன காரணம் என்ன? இதற்கு பெரிய அறிவியலே இருக்கு!


நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, சாலையில் நடுவே உள்ள டிவைடர்களில் மிக அதிகளவில் வளர்க்கப்படும் அரளி செடிகளை பார்த்து இருப்பீர்கள். ஏன் அதுவும் குறிப்பாக அந்த செடிகள் மட்டுமே வளர்க்கப்படுகிறது என நீங்கள் நினைக்கக்கூடும். இதோ அதற்கான காரணத்தை பார்ப்போம்...

நெடுஞ்சாலைகளின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் அதிகப்படியான புகையை கக்குகின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசடைகிறது. வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையில் கார்பன் துகள்கள் அதிகளவில் இருப்பதுதான் இதற்கு காரணம். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 

இந்த பிரச்னையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே, நெடுஞ்சாலைகளின் நடுவே உள்ள டிவைடர்களில் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. செவ்வரளி செடியின் இலைகள் மற்றும் மலர்களுக்கு விசேஷ சக்தி ஒன்று உள்ளது. அதாவது வாகன புகையால் காற்றில் கலந்துள்ள கார்பன் துகள்களை நீக்கும் தன்மை அவற்றுக்கு உண்டு. இதன் மூலம் அசுத்தமான காற்றை, செவ்வரளி செடியின் இலைகள் மற்றும் மலர்கள், தூய்மையான காற்றாக மாற்ற விடும். எனவே நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு செவ்வரளி செடிகள் உதவி செய்கின்றன. செவ்வரளி செடிகள் காற்று மாசுபாட்டை குறைப்பதுடன், ஒலி மாசுபாட்டையும் குறைக்கின்றன. ஆம், சத்தத்தை குறைக்கும் தன்மை இவற்றுக்கு உண்டு. 

மேலும், செவ்வரளி செடிகளுக்கு, வறட்சியை தாங்கும் திறனும் இருக்கிறது. அத்துடன் இவை அனைத்து பருவ நிலைகளிலும் வளரக்கூடியவை என்பதும் கூடுதல் சிறப்பு. இதுபோன்ற காரணங்களால், செவ்வரளி செடிகளுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் செவ்வரளி செடியின் இலைகளை, எந்த விலங்குகளும் உண்ணாது. எனவே விலங்குகளிடம் இருந்து நாம் செவ்வரளி செடிகளை காக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதுபோன்ற காரணங்களால்தான் நெடுஞ்சாலைகளில் செவ்வரளி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.