அஸாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 44, 075 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,625 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒப்பந்த ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், தடுப்பூசி போடாத பொதுமக்கள் மருத்துவமனைகளை தவிர பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொது இடங்களுக்குச் செல்லும் அனைத்து தரப்பினரும் முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அசாம் அரசு தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.