புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் மே 17- ஆம் தேதி அன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளும், அந்தந்த மாநில அரசுகள், கல்வியாளர்கள் உள்பட பல தரப்பினர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்தும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழைய அனுமதிக்க மாட்டோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வகுப்புகள், கொரோனா சூழல் உள்ளிட்டவைத் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
.
மே 17-ல் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!
.