Breaking News :

Saturday, June 10

வரும் பிப்.16 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் சற்று  குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு  தளர்த்தி வருகிறது. இதற்கிடையே, கூடுதல் தளர்வுகளுடன் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 16-ம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களிலும் 100 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன்  செயல்படலாம்.

அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.