Breaking News :

Tuesday, December 03
.

 தொழில்நுட்ப படிப்பு தேர்வு முடிவுகள் அறிவுப்பு


உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம்,
மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணாக்கர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது.


மொத்தம் 2,28,441 மாணாக்கர்களில் 2,09,338 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.63ரூ ஆகும். 18,529 மாணாக்கர்கள் தேர்ச்சி
பெறவில்லை. மேலும், 574 மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தேர்வு முடிவுகளை றறற.வனேவந.படிஎ.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்படி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வெழுதலாம்.


இதற்கான தேர்வு கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம். நடப்பு பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணாக்கர்களுக்கான (அரியர் தேர்வு உட்பட) தேர்வுகள் 14-06-2021 முதல் 14-07-2021 வரை நடைபெறும்.

மாணாக்கர்கள் இதற்கான தேர்வு கட்டணத்தை 04-06-2021 முதல் 10-06-2021 வரை செலுத்தலாம். 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.