Breaking News :

Monday, December 11
.

எதிர்க்கட்சி துணைத்தலைவராகிறார் ஓ.பன்னீர்செல்வம்


தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில்... அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவிக்கு பலர் ஆசைப்படுவதாக செய்திகள் உலாவந்த நிலையில், சட்டப்பேரவையி எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க-வின் சட்டப்பேரவை கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும், செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனும், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.