வருகின்ற 17ஆம் தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் முதலமைச்சர், அன்று காலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
இதில் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் உள்ளடக்கிய கடிதத்தை மோடியிடம் கொடுக்க இருக்கிறார். நீட் தேர்வு விலக்கு, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து, ஆக்ஸிஜன் தேவை, ஹைட்ரோ கார்பன் திட்டம் விலக்கு போன்ற கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் பேச இருப்பதாக தெரிகிறது.
இதன் பிறகு, மறுநாளான 18ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.