மிக உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசு கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தார் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான். இதனை அவரது மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றும் 5,088 பேருக்கு கொரோனா பாதிப்பு- 68 பேர் உயிரிழப்பு.
கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.