தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த நாட்களுக்கு முன் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து இருவரும் 2ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை முன்னேற்றமடைந்தார். எனவே இன்று அக்டோபர் 9ம் தேதி , மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்த்தது மத்திய அரசு அறிவிப்பு
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இருக்கிறது. அதில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலை பட்டப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.