Breaking News :

Sunday, October 13
.

ஏழு சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே!


பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் ஏழு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே தற்காலிகமாக ரத்துச் செய்தது.

தெற்கு ரயில்வே இன்று (16/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மே 17- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை இயக்கப்படவிருந்த சென்னை எழும்பூர்- மன்னார்குடி (06179), கண்ணூர்- கோவை (06607), கோவை- கண்ணூர் (06608), ஆலப்புழா- கண்ணூர் (06307), கண்ணூர்- ஆலப்புழா (06308), சென்னை எழும்பூர்- திருச்சி (06795), திருச்சி- சென்னை எழும்பூர் (06796) ஆகிய ஏழு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 'டவ்- தே' புயல் காரணமாக கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வழித்தடங்களில் செல்லும் 50- க்கும் மேற்பட்ட ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.