Breaking News :

Saturday, April 20
.

எட்டு சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே!


தமிழகத்தில் எட்டு சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருச்சி- ராமேஸ்வரம் சிறப்பு ரயில்  (06849, 06850) இரு மார்க்கத்திலும் மே 19- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.


கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில் (02668) மே 19- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரையும், நாகர்கோவில்- கோவை சிறப்பு ரயில் (02667) மே 20- ஆம் தேதி முதல் ஜூன் 1- ஆம் தேதி வரையும், தஞ்சை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06866) மே 19- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரையும், சென்னை எழும்பூர்- தஞ்சை சிறப்பு ரயில் (06865) மே 20- ஆம் தேதி முதல் ஜூன் 1- ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

லோக்மான்யா திலக் டெர்மினஸ்- கொச்சுவேலி சிறப்பு ரயில் (06163) மே 21- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரையும், கொச்சுவேலி- லோக்மான்யா திலக் டெர்மினஸ் சிறப்பு ரயில் (06164) மே 20- ஆம் தேதி முதல் மே 30- ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது. " இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.