செப்டம்பர் 11, 1921 இதே நாளில் மறைந்தார் பாரதியார்..
மண்ணை விட்டு விண்ணுக்கு சென்று நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.. நூறு ஆண்டுகள் ஆனால் என்ன. இன்னும் கவிதைகள் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றீரே...
முண்டாசு கவிஞனே. முறுக்கு மீசைக்காரனே.. எட்டயபுரத்து கட்டபொம்மனே எங்கள் பாரதி..
எட்டு மொழி கற்று ..எட்டு மொழியிலும் எழுத படிக்க தெரிந்து.. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிதாவதெங்கும் காணோம் என எழுதினாயே.. உன்னை விட அந்த வரிகளை பொருத்தமாக எழுத பன்மொழி கற்று தேர்ந்த கவிஞன் எவன் உண்டு இங்கு..
"மண்ணும் இமயமலை எங்கள் மலையே" என்று தீரத்துடன் இந்திய எல்லையை சொன்னாயே..
சிந்து நதியின் மிசை நிலவினிலே ..சேர நன்னாட்டிளம் பெண்களுடனே..சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து ..தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..என சுதந்திரத்திற்கு முன்பே பரந்த பாரத நாட்டை கனவு கண்ட பாரதியே...
வளைய தெரியாததால் உன் கவிதை தேசியகீதமாகாமல் வளைந்து கொடுத்து இங்கிலாந்து ராணியை வரவேற்று எழுதியவன் தேசியக்கவியாகவும் அவன் எழுதிய பாட்டும் கொண்டாட படுகின்றதே..
வறுமையிலும் வளையாமல்.. தேசத்தை நேசித்த பாரதியே.. பசியை மறந்து கடன் வாங்கி வந்த அரிசியை காக்கை குருவிக்கு அள்ளி எறிந்து "காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற மகா கவியே... காணி நிலம் தானே உன் கனவாக இருந்தது... வறுமையிலும் பெருமையை இழக்காத மகாகவியே உன் நூறாவது ஆண்டு நினைவு நாளில் உன் பாதம் பணிகிறேன்..
என் தேசத்தை நேசித்த தெய்ப்பிறவிக்கு நினைவு நாள் அஞ்சலி...