அ.தி.மு.க-விலிருந்து பெங்களூரு புகழேந்தி அதிரடியாக நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து சசிகலா தன் தொண்டருடன் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதில் புகழேந்தி நீக்கம் மிகுந்த ஆச்சர்யத்தை அளிப்பதாக கூறியுள்ளார். வேறு ஒரு தொண்டருடன் பேசும் ஆடியோவில், “கட்சியை நாம் கண்டிப்பாக மீட்போம். ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. இவர்கள் செய்வதெல்லாம் எனக்கு புதிதாக தெரியவில்லை. அம்மா காலத்திலேயே இவர்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்.” என்று பேசியுள்ளார்.