தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.4000 கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கிவருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில். அகதிகள்முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழர்கள் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவனைத்து, தி.மு.க அரசு காக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.