ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாகப் பேசினாலோ, சத்தமாகப் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்கப்படும்.. மேலும், இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை எரிய விடக்கூடாது. நள்ளிரவில் சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் சத்தமாக பேசக்கூடாது மீறினால் தண்டனை உறுதி என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சத்தமாக பாட்டு கேட்டு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரெயில்வேத்துறை அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேத்துறை புதிய விதியை கொண்டுவந்துள்ளது. அதன் பின் வருமாறு
இனிமேல் ரயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டுக்கொண்டே சென்றாலும், சத்தம் போட்டு பேசினாலும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரெயில் ஊழியர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ரயில் ஊழியர்கள், ஆர்.பி.எஃப். வீரர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்டோர் பயணிகள் இன்னல்களை சந்திக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை மேற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், குரூப்பாக பயணம் செய்யும்போது, இரவு 10 மணிக்குப்பிறகு குறிப்பிட்ட இரவு நேர லைட்-ஐ தவிர மற்ற லைட்டுகளை ஆன் செய்து வைக்க அனுமதி கிடையாது. பயணிகள் இதை கேட்க தவறினால், நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.