Breaking News :

Monday, May 27
.

சளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்!


சளைக்காத உழைப்புக்கு ராகுல் டிராவிட்?

ராகுல் டிராவிட் அவர்கள்
2012 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இந்தியகிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு 9 ஆண்டுகள் எடுத்து கொண்டார்.

2015 - ஆம் ஆண்டு under 19 எனப்படும் 19 வயதினருக்கு உட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கபட்டார்.. அவரது அனுபவத்தின் வெளிப்பாட்டை இளம் வீரர் களுக்கு அளித்து 19 வயதினர்களுக்கான
உலக கோப்பையை 2018 - ல் இந்திய அணி வெல்ல காரணமாக திகழ்ந்தார்..

அவர் இந்திய அணிக்காக விளையாடிய காலங்களில் *தடுப்பு சுவர் ( The Wall ) என்று அனைவராலும் போற்றப்பட்டார்...

அவர் எப்படி தடுப்பு சுவராக உருமாரினார்?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் மட்டும் 31,258 பந்துகளை ஆடியுள்ளார்.. அதாவது 5209 ஓவர்* .. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை சந்தித்து ஆடிய வீரர் ராகுல் டிராவிட் மட்டும் தான்.
இன்னும் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால் அவர் 44,152 நிமிடங்கள் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் மட்டையை வைத்து விளையாடியுள்ளார்.. இது மட்டும் 736 hours (மணிகள்* ). இது இன்று வரை உலக சாதனையாக பார்க்கப்படுகிறது..

மேலும் சிறப்பாக கூறவேண்டுமானல்,ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் மேலும் 8 ஆண்டுகள் கூட  டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியும் , டிராவிட் அவர்களின் சாதனையை முறியடிக்க வில்லை.. அது இன்னும்பல மைல்கள் தொலைவிலேயே உள்ளது..

இனி வரும்காலங்களில் இளம் வீரர்கள் அதிக ரன்கள் எடுத்து பலர் சாதனையை முறியடிக்க வாய்ப்புண்டு, ஆனால் ராகுல் டிராவிட்டுக்கு
போட்டி அவர் மட்டும் தான்... அவருக்கு நிகர் அவர் மட்டும் தான் என்று உறுதியாக என்னால் கூற முடியும்..

எத்தனையோ அதிரடி பேட்ஸ்மென்கள் விளையாடி உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்கள்.. ஓரிரு ஆண்டுகளில் புதியவர்கள் வந்ததும், நாம் பழையவர்களை மறந்து புது அதிரடி வீரர்களை விண்ணுக்கு உயர்த்தி ஆரவாரம் செய்து போற்றுவோம்..

ஆனால் ராகுல் டிராவிட் எப்போதும் நாம் சோதனையான காலங்களில் இந்திய அணி சிக்கி தவிக்கும் போதெல்லாம், எதிரணிகளுக்கு அடிபணியாமல்,தொடர்ந்து போராடி இந்திய அணியின் மானத்தை காத்தவர்..
 ராகுல் டிராவிட்டுக்கு என்றும் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் உண்டு.. *Cover drive மற்றும் ஹூக் Hook shot என்றால் ராகுல் டிராவிட் மட்டும் தான்...* காண்பதற்கு அவ்வளவுஅழகாக இருக்கும், தன்னைநோக்கி வருகின்ற பந்தின் திசைவேகத்திற்கு ஏற்ப தனது கை, கால்கள் எந்த வித அலப்பரையின்றி, எவ்வாறு பந்தை எதிர்கொள்ள வேண்டுமோ, அதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு தனது தனித்துவத்தை  ரசிகர்களின் நெஞ்சில் நிலை நிறுத்துவார்.. அவர் கிரிக்கெட்டில் ஓய்வு
பெற்றதிலிருந்து என்னால் அந்த அளவுக்கு கிரிக்கெட்டைமுழுமையாக ரசிக்க முடியவில்லை.. எதையோ இழந்ததை போன்று ஒரு உணர்வு என்னுள் எழுவதை உணரமுடிகிறது..

அவர் இந்த நிலையை அடைவதற்கு அவரது *அர்ப்பணிப்பு மற்றும் மனதின் ஸ்திரத்தன்மையும்* மூலக்காரணமாகும்..

வாழ்வில் வெற்றிகள் எளிதாக கிடைப்பதில்லை.. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் அமையும், அது வரை முயற்சியை கைவிடாமல் முயன்று கொண்டே இருக்கவேண்டும்..
அது நடக்கும் வரை எதையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்..
உங்கள் கனவை இலக்காக மாற்றி முன்னேறி செல்லுங்கள்.. பலருக்கு இலக்கை அடைய சில மாதங்கள் போதும், சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம்,தோல்விகள் கூட ஒரு வெற்றியே.. அது உங்களை மெருகேற்றி, புதுத்தெளிவுடன் வழி நடத்தி செல்லும்.. உங்கள் இலக்கை பொறுத்து, காத்திருக்கும் ஆண்டுகள் முன் பின் மாருமே தவிர, உங்கள் வெற்றி உங்களை வரவேற்க, ஆரத்தழுவ
காத்திருக்கின்றது என்றே கருத வேண்டும்..

சலிக்காத மனம் ஒன்றே உங்களை வாழ்வில் உயர்த்தும்...
வெல்வதும்,வீழ்வதும் உனக்கான பாடம், வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து விட்டு செல்லவேண்டும்..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.