Breaking News :

Thursday, April 18
.

மயிலாப்பூர் பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டு


மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், சீரிய முறையில் செயல்பட்டு, எதிரி ரவி என்பவருக்கு  தண்டனை  பெற்று தந்த W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய  ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Commissioner of Police commended W-22 Mylapore AWPS, Inspector of Police and Head Constable for their sincere efforts by following up the court proceedings, to ensure conviction for the accused, for sexually harassing a minor girl in Mylapore Police District.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை  ரவி என்பவர் மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின் பேரில், W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி ரவி (வ/58),  மயிலாப்பூர், சென்னை என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கமலாதேவி (தற்போது  கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்), மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் திருமதி.J.எட்டியம்மாள் (த.கா.25608) மற்றும் காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 30.11.2021 இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் எதிரி ரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ரவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்புரை வழங்கினார்.

W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போக்சோ வழக்கில், சீரிய முறையில் பணிசெய்து குற்ற எதிரிக்கு தண்டனை பெற்று தந்த W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.கமலாதேவி மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் திருமதி.J.எட்டியம்மாள் (த.கா.25608)ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 07.12.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

On 14.11.2018, parents of a 11 years old girl of Mylapore Police District lodged a complaint at W- 22 Mylapore AWPS stating that Ravi had sexually harassed their daughter. In this regard, a case was registered under POCSO Act.

A team led by the Inspector of Police, W-22 Mylapore AWPS investigated the case and arrested the accused Ravi and remanded him to judicial custody. 

The case was heard in the POCSO Court on 30.11.2021, judgement pronounced by convicting the accused Ravi (M/58) of Mylapore to undergo 7 years  imprisonment with a fine of Rs.15,000/-, in default, to undergo another 4 months imprisonment. Cash Rs.2 lakh compensation should be given to the victim girl.

On 07.12.2021, the Commissioner of Police Tr. Shankar Jiwal IPS, personally invited the Inspector of Police Tmt.Kamaladevi, (currently working Guindy Traffic Investigation Wing) and Woman Head Constable Tmt.J.Ettiyammal and lauded their work by presenting them with certificates of appreciation and rewards.

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.