Breaking News :

Friday, April 19
.

சென்னையில் 127வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை


சர்வதேச அளவில் ரஷிய போரால் கச்சா எண்ணெய் விலை உயர கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.  அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஆகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இதனிடையே, எரிபொருட்கள் கடந்த 126 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்கப்பட்டு வந்தது.  

எனினும், தொடர்ந்து 127வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.