தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் கீழ் அடங்கும் பள்ளிகளில், அங்கீகாரம் இல்லாத 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடப்படும். தொடர்ந்து அந்தப் பள்ளிகள் செயல்பட்டால், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களே பொறுப்பாவார்கள் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகளின் மீதும் நடவடிகை எடுக்கப்படும் என்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்த்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளத