தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ் சேகர், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட ஆட்சியராக பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூகநலன், சத்துணவு திட்டத்துறை இணைச்செயலாளர் கார்மேகம், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் ஆணையராக இருந்த சிவராசு, திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
.
ஐந்து மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
.