Breaking News :

Saturday, June 10

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு - தேசிய தேர்வு முகமை

வரும் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இத்தேர்வுக்கு அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வரும் 7-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வின் கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், 3-ம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800-லிருந்து 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழிக்கட்டணத்துக்கான செலவு, ஜி.எஸ்.டி வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.