சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் வாழும் 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் ஒன்பது வயதான நீலா என்ற சிங்கம் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 3ஆம் தேதி உயிரிழந்தது.
இதனால் மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகைதந்து ஆய்வு நடத்தினார். விலங்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை பார்வையிட்டார். சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.